முன்னாள் திமுக எம்பி மஸ்தான் கொலை - சொத்துக்காக தம்பியே கொன்றது அம்பலம்!
முன்னாள் எம்பி மஸ்தான் கொலை வழக்கில் அவரது சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் எம்பி கொலை
சென்னை சேப்பாக்கத்தைச் சேர்ந்த முன்னாள் திமுக எம்.பி.யும் மாநில சிறுபான்மையினர் ஆணையத் துணைத் தலைவருமான மஸ்தான் கடந்த டிசம்பர் 22 ஆம் தேதி சென்னையிலிருந்து திருச்சி நோக்கிச் சென்றபோது, சென்னை கூடுவாஞ்சேரி அருகே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாகத் தகவல் வெளியானது.
தொடர்ந்து அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. மஸ்தானின் முகத்தில் காயம் இருந்ததால் கூடுவாஞ்சேரி காவல்துறையினர் இந்த வழக்கை சந்தேக மரணம் என மாற்றி விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்தச் சம்பவத்தில், மஸ்தானின் உறவினர்களே அவரைத் திட்டமிட்டுக் கொலை செய்தது அம்பலமானது.
தம்பி கைது
இது தொடர்பாக மஸ்தானின் கார் டிரைவர், மஸ்தானின் உறவினரான சித்தா டாக்டர், அவரது நண்பர்கள்,உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக காவலர்கள் நடத்திய விசாரணையில், மஸ்தான் மருத்துவர் என்பதால் அவரை ஆயுதங்களால் கொல்ல முடியாது. எனவே மூச்சுத் திணற வைத்துக் கொலை செய்தோம்” எனக் கூறியுள்ளார்.
குற்றவாளிகள் 5 பேரும் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கொலையில் அவரது தம்பிக்கும் தொடர்பு இருப்பதைக் கண்டறிந்த காவல்துறையினர் கௌசே ஆதாம்பாஷாவினை கைது செய்தனர். அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில்,
5 லட்சம் ரூபாய் கடனைத் திரும்பக் கேட்டதால் நண்பர்களின் உதவியுடன் அண்ணனைக் கொன்றதாகவும், பூர்வீக சொத்துத் தகராறு மற்றும் பணப் பிரச்சனையே மஸ்தான் கொலைக்கு முக்கியக் காரணம் என்றும் கூறியுள்ளார்.