முன்னாள் திமுக எம்பி கொலை - விசாரணையில் அம்பலமான பரபர தகவல்!
முன்னாள் திமுக எம்பி மஸ்தான் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கொலை?
திமுக சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு மாநில செயலாளர், தமிழக சிறுபான்மை வாரிய துணைத்தலைவராக இருந்தவர் முன்னாள் எம்.பி. மஸ்தான்(66). சென்னையை அடுத்த ஊரப்பாக்கத்தில் காரில் சென்று கொண்டிருந்தபோது நெஞ்சுவலி ஏற்பட்டு மஸ்தான் தஸ்தகீர் உயிரிழந்தார் என்று கூறப்பட்டது.
அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவரது சாவில் மர்மம் இருப்பதாக சந்தேகம் எழுந்ததால் அவரது மகன் கூடுவாஞ்சேரி போலீசில் புகார் அளித்தார். இது தொடர்பாக சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
அதிர்ச்சி தகவல்
இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக போலீசார் டிரைவர் உள்பட 5 பேரை கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இமரான் என்பவருக்கு கொடுத்த பணத்தை திருப்பி கேட்ததால்
ஆத்திரத்தில் கொலை செய்ததாக கூறப்படுகிறது. கொலையில் தொடர்புடைய இம்ரான், சுல்தான்,நசீர் தவ்பீக், லோகேஷ் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்.