'' இதில் என்ன டவுட்.. My UnLords..” நீதிபதி ரமணா கேள்விக்கு திமுக எம்பி பதில்
திமுக மட்டும் தான் தன்னை அறிவாளி கட்சி என்று நினைத்துக்கொள்ள வேண்டாம் என தலைமை நீதிபதி ரமணா வைத்த விமர்சனங்களுக்கு திமுக எம்பி செந்தில் குமார் பதில் அளித்துள்ளார்.
திமுக மீது கொந்தளித்த நீதிபதி
அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கையில் இலவசங்கள் வழங்கும் உரிமையினை அரசியல் கட்சிகள் ரத்து செய்ய வேண்டும் என்று பாஜகவை சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வினி குமார் சுப்ரிம் கோர்டில் வழக்கு தொடர்ந்த நிலையில் , இன்று வழக்கானது தலமை நீதிபதி ரமணா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது திமுக சார்பில் வழக்கறிஞர் எம்பி வில்சன் வாதிடும் போது தலைமை நீதிபதி ரமணா குறுக்கிட்டு தனது முக்கிய கருத்தினை தெரிவித்தார். அதில் நீங்கள் மட்டும்தான் புத்திசாலி கட்சி என்று நினைக்கவேண்டாம்.
நீங்கள் சொல்வதை எல்லாம் நாங்கள் கேட்கவில்லை என்று நினைக்காதீர்கள். நீங்கள் சொல்வதை நாங்கள் கவனிக்காமல் இருக்கிறோம் என்று நினைக்காதீர்கள், என்று கோபமாக பேசினார்.
தலைமை நீதிபதி ரமணாவின் கருத்திற்கு திமுக கட்சியினை சேர்ந்த பலரும் தங்களது கருத்தினை சமூக வலைத்தளங்களில் கூறி வருகின்றனர்.அந்த வகையில் திமுக எம்பி டாக்டர் செந்தில்குமார்.
அதில்ஆம். #சமூக_நீதி ஆட்சி மூலம் இதை சாதித்து,தரவுகள் மூலம் நிரூபித்து காட்டிய கட்சி திமுக மட்டுமே. இதில் என்ன doubt. My UnLords, என்று விமர்சனம் வைத்துள்ளார். லார்ட் என்று குறிப்பிடாமல் அதற்கு எதிர் பதத்தில் அன் லார்ட்ஸ் என்று குறிப்பிட்டு திமுக எம்பி டாக்டர் செந்தில் குமார் விமர்சனம் வைத்துள்ளார்.
உச்ச நீதிமன்றம் கருத்து
இந்த வழக்கில் கருத்து தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம் இலவசங்களும் சமூக நலத்திட்டங்களும் இலவசங்கள் காரணமாக மாநிலங்களின் பொருளாதாரம் பாதிக்கிறதா என்று பார்க்கக் வேண்டும் முறையற்ற இலவசங்கள் தொடர்பான அறிவுப்புகள் சரியா என்பதை ஆராய அமைப்பு ஒன்றை வேண்டுமானால் உருவாக்கலாம். இலவச மின்சாரம், இலவச தண்ணீர் ஆகியவை நலத்திட்டங்களா என்று பார்க்க வேண்டும், என்று உச்ச நீதிமன்றம் வாதம் வைத்தது.