முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு திடீர் உடல்நிலை குறைவு - மருத்துவமனையில் அனுமதி!
உடல்நிலை குறைவு காரணமாக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர்
தமிழகத்தில் பருவமழை காரணமாக மழைக்கால நோய்கள் அதிகரித்துள்ளது. குறிப்பாக சாதாரண சளி, காய்ச்சல்களுக்கு மத்தியில் டெங்கு காய்ச்சல், மலேரியா டைப்பாய்டு போன்ற காய்ச்சல்களால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நோய் தடுப்புக்கான தீவிர நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. கடந்த 2013 - 2021ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக பொறுப்பில் இருந்தவர் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்.
இலவச பஸ்சில் பயணிக்கும் பெண்கள்.. ஓசி டிக்கெட், சாதி என்ன?.. அவமதிக்கும் ஆட்சி - பழனிச்சாமி கண்டனம்!
மருத்துவமனையில் அனுமதி
இந்நிலையில், முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உடல்நிலை குறைவு காரணமாக திருச்சி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திடீரென உடல்நல பாதிப்பு ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு சென்ற அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு டெங்கு பாதிப்பு இருப்பதை உறுதி செய்தனர்.
இவர் டெங்கு பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.