துணை முதலமைச்சராகும் உதயநிதி -பதவி பறிப்புக்கு பின் மனோ தங்கராஜ் போட்ட பரபர ட்வீட்!

M K Stalin Tamil nadu DMK
By Vidhya Senthil Sep 29, 2024 07:53 AM GMT
Report

மதவாத பாசிச அரசியலை எதிர்த்து, ஜனநாயக அமைப்புகளைப் பலப்படுத்தி சமூக நீதியை நிலைநாட்டத் தமிழ்நாட்டில் எடுக்கப்படும் முன்னெடுப்புகளில் எனது பங்களிப்பு தொடர்ந்து இருக்கும் என்று மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

 மனோ தங்கராஜ் 

விளையாட்டுத்துறை அமைச்சராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்குத் திட்டமிடல் மற்றும் வளர்ச்சித் துறையும் கூடுதலாக வழங்கப்படுகிறது. மேலும் தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

mk stalin

அதில் செந்தில் பாலாஜி, கோவி செழியன், ராஜேந்திரன் நாசர் ஆகியோர் புதிய அமைச்சர்களாக அறிவிக்கப்பட்டு இருக்கிறார்கள். மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான், கா.ராமச்சந்திரன் ஆகியோர் அமைச்சரவையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமின்.. பாஜகவுக்கு இனி கேடு காலம் தான் -ஆர்.எஸ்.பாரதி!

செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமின்.. பாஜகவுக்கு இனி கேடு காலம் தான் -ஆர்.எஸ்.பாரதி!

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் தனது எக்ஸ் தளத்தில் 2021 - தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற போது தமிழ்நாட்டின் மென்பொருள் ஏற்றுமதி 9.5% என்றிருந்தது ஒரே ஆண்டில் 2022-ல் 16.4% மாகவும், 2023-ல் 25% மாகவும் உயர்ந்தது.

 சமூக நீதி

2023-ல் பால்வளத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றபோது ஆவின் பால் கொள்முதல் நாளொன்றிற்கு 26 லட்சம் லிட்டராக இருந்தது 2024-ல் ஆவின் வரலாற்றில் முதன் முறையாக 38 லட்சம் லிட்டராக உயர்ந்தது. விவசாய பெருங்குடி மக்கள் உற்பத்தி செய்யும் பாலுக்கு உரிய விலை கிடைப்பதையும்,

dmk

10 நாட்களுக்கு ஒரு முறைப் பால் பணம் பட்டுவாடா செய்வதையும், பொதுமக்களுக்கு எந்தவித தட்டுப்பாடுமின்றி பால் விநியோகம் செய்யும் நிலையை உருவாக்கியதும் மன நிறைவு தருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் மதவாத சக்திகளின் பிரிவினை அரசியலை முறியடித்து மக்களை ஒன்றுபடுத்தி மாவட்டத்தை வளர்ச்சிப்பாதையில் எடுத்துச் சென்றுள்ளேன்.

இப்பணிக்கு ஒத்துழைப்பு அளித்த அனைவருக்கும் நன்றி! மதவாத பாசிச அரசியலை எதிர்த்து, ஜனநாயக அமைப்புகளைப் பலப்படுத்தி சமூக நீதியை நிலைநாட்டத் தமிழ்நாட்டில் எடுக்கப்படும் முன்னெடுப்புகளில் எனது பங்களிப்பு தொடர்ந்து இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.