காஞ்சிபுரத்தில் நடைபெற்ற திமுக பவள விழா-மீண்டும் அமைச்சராகும் செந்தில் பாலாஜி ?
காஞ்சிபுரத்தில் நடைபெறும் திமுக பவள விழா பொதுக்கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வருகை தந்தார்.
திமுக
திமுக தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவுபெற்றதைத் தொடர்ந்து, அக்கட்சியின் பவள விழா கொண்டாட்டங்கள் நடைபெற்றது .அந்த வகையில் கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி முப்பெரும் விழாவோடு சேர்த்து திமுக பவள விழாவும் கொண்டாடப்பட்டது.
இந்நிலையில், காஞ்சிபுரத்தில் திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் திமுக பவள விழா பொதுக் கூட்டத்தில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார் .
இதில், திமுக கூட்டணி கட்சி தலைவர்களான கி.வீரமணி , கு.செல்வப்பெருந்தகை , தொல்.திருமாவளவன் வைகோ , கே.பாலகிருஷ்ணன், இரா.முத்தரசன், கே.எம்.காதர்மொய்தீன் உள்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், திமுக மற்றும் கூட்டணி கட்சித் தொண்டர்கள் பங்கேற்றனர்.
செந்தில் பாலாஜி
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வருகை தந்தது அனைவரது கவனத்தை ஈர்த்தது . முன்னதாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி நேற்று நிபந்தனை ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது .
மேலும் சில நிபந்தனைகள் குறிப்பிட்ட நிலையில், அமைச்சராக எந்தத் தடையும் சட்டப்பூர்வமாக இல்லை. இதனால், விரைவில் அவர் அமைச்சராகலாம் என அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.