உத்தம புருசனா.. நயனை சயனம் செஞ்சதெல்லாம் சொல்லவேண்டியதிருக்கும் - ஜெயக்குமார் காட்டம்!
நயனை சயனம் பண்ணியதை எல்லாம் நாங்கள் வெளிப்படுத்த வேண்டியிருக்கும் என ஜெயக்குமார் பேசியுள்ளார்.
ஜெயக்குமார்
சென்னை ராயபுரம் பெரியபாளையத்தம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு , கோயிலில் வழிபாடு நடத்திய பிறகு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், எங்களை குப்பை என்கின்றனர். குப்பை உரமாகும். ஆனால் திமுக எனும் கறையான், எல்லாவற்றையும் அரித்து நாசமாக்கிவிடும். கறையான்கள் களையெடுக்கப்படும் காலம் வந்துவிட்டது. ஜெயலலிதா பற்றி தவறாக விமர்சிக்கின்றனர்.
காட்டம்
அவருடை தாத்தா, அப்பா மற்றும் அவருடைய காம லீலைகளை நாங்கள் எழுத ஆரம்பத்தால் 4 வண்டியில் அவற்றை எடுத்து செல்ல வேண்டியிருக்கும். உதயநிதி உத்தம புருசன் மாதிரி பேசுகிறார். அரசியல் ரீதியாக மட்டும் விமர்சனம் செய்ய வேண்டும்.
மீறி தனிப்பட்ட முறையில் ஜெயலலிதாவை விமர்சித்தால் அவர்களை பற்றி சோசியல் மீடியாவில் போட்டு நாங்கள் நாறடித்துவிடுவோம். நீங்கள் தனிப்பட்ட முறையில் ஒரு விமர்சனம் செய்தால் நாங்கள் ஆயிரம் விமர்சனம் செய்வோம்.
நயனை சயனம் பண்ணியதை எல்லாம் நாங்கள் வெளிப்படுத்த வேண்டியிருக்கும். மாணவர்கள், தமிழக மக்கள் நீட்டை விரும்பவில்லை என கடந்ந 2 ஆண்டாக நீட் குறித்த எங்களது நிலைப்பாட்டை கூறி வருகிறோம்.
எனவே மதுரை மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றி எங்களது நிலைப்பாட்டை கூற வேண்டிய அவசியம் ஏற்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.