முதல்வர் குறித்து இனி அவதூறாக பேச மாட்டேன்...ஜகா வாங்கிய மாஜி அதிமுக அமைச்சர்!!

M K Stalin Madras High Court
By Karthick Oct 12, 2023 10:01 AM GMT
Report

முதல்வர் முக ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து இனி அவதூறாக பேசமாட்டேன் என அதிமுக முன்னாள் அமைச்சர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

செல்லப்பாண்டியன் விவகாரம்

அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியன், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் செப்டம்பர் 15-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசும்போது, மறைந்த தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதி, தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின், எம்.பி கனிமொழி உள்ளிட்டோர் என கருணாநிதி குடும்பத்தினரை அவதூறாக பேசினார் என கூறப்படுகிறது.

ex-min-assures-wont-talk-bad-about-cm-mk-stalin

இதனை தொடர்ந்து, விளாத்திகுளம் திமுகவினர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். அந்த புகாரின் அடிப்படையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், அவர் முன்ஜாமீன் கோரி, நீதிமன்றத்தை நாடினார்.

தட்டுங்க திறக்கும்...கூட்டணிக்கு அடிபோடுகிறதா பாமக? வைரலாகும் ராமதாஸின் பதிவு!!

தட்டுங்க திறக்கும்...கூட்டணிக்கு அடிபோடுகிறதா பாமக? வைரலாகும் ராமதாஸின் பதிவு!!

இனி வராது

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது செல்லப்பாண்டியன் தரப்பில் அரசின் செயல்பாட்டை மட்டுமே விமர்சித்ததாகவும், முதல்வருக்கு குறித்து அவதூறாக பேசவில்லை என்று குறிப்பிடப்பட்டு, எதிர்காலத்தில் இனி இதுபோன்ற குற்றச்சாட்டுகள் இல்லாமல் நடந்து கொள்வதாக உத்தரவாதம் அளித்து மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

ex-min-assures-wont-talk-bad-about-cm-mk-stalin

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, 15 நாட்களுக்கு விளாத்திகுளம் போலீசில் ஆஜராக வேண்டும் என நிபந்தனை விதித்து, அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லபாண்டியனுக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.