தட்டுங்க திறக்கும்...கூட்டணிக்கு அடிபோடுகிறதா பாமக? வைரலாகும் ராமதாஸின் பதிவு!!
பாமகவின் நிறுவனர் ராமதாஸின் சமீபத்திய பேஸ்புக் பதிவு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததா? என்ற பல கேள்விகளை கிளப்பியுள்ளது.
ராமதாஸ் பதிவு
பாமகவின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அண்மையில் தனது பேஸ்புக் பக்கத்தில் தட்டுங்கள், திறக்கப்படும். கேளுங்கள் கொடுக்கப்படும் என்பார்கள் - இவர்கள் கேட்கப் போகிறார்கள், ஆனால், எதுவும் கொடுக்கப்படப் போவதில்லை என்று பதிவிட்டிருந்தார்.
இது அவர் வரும் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து பதிவிட்டுளாரா? என்று பலரும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். இந்த பதிவு மிகவும் வைரலாகி வருகின்றது. உண்மை கதை என்ன..? ஆனால் அதன் பின்னணியில் மற்றொரு காரணமும் இருப்பதாக நம்பப்படுகிறது.
காவிரி நதிநீர் விவகாரம்
பெரும் சலசலப்பை தமிழகம் மற்றும் கர்நாடகா இரு மாநிலத்திற்கு இடையேயும் பெரும் முரண்போக்கான சம்பவங்கள் ஏற்பட்டு வருகிறது.
அதன் குறித்தே தான் அவர் இந்த பதிவை வெளியிட்டிருப்பர் என கூறப்பட்டு வரும் நிலையிலும், அரசியல் சாதுரியம் மிக்கவர் என புகழப்படும் டாக்டர் ராம்தாஸ் இந்த பதிவினை அரசியல் கூட்டணி மற்றும் காவிரி என இரு விஷயங்களை இணைத்து கருத்து தெரிவித்திருக்கலாம் என்றும் சிலர் பேசி வருகின்றனர்.