ஜெனிலியாவை மறுத்த முன்னாள் முதலமைச்சர் - விடாமல் அடம்பிடித்த நடிகை!

Tamil Cinema Actors Tamil Actress
By Vinothini Jul 25, 2023 07:48 AM GMT
Report

முன்னாள் முதமைச்சர் நடிகை ஜெனிலியாவின் காதலை மறுத்த தகவல் இணையத்தில் பரவி வருகிறது.

நடிகை

ஜெனிலியா தமிழ் சினிமாவில் பிரபல நடிகையான ஜெனிலியா, இயக்குனர் ஷங்கர் இயக்கிய பாய்ஸ் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதில் இவரது கியூட்டான நடிப்பால் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். பின்னர் சந்தோஷ் சுப்ரமணியத்தில் ஹாசினியாகவும் வந்து தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

ex-cm-reject-actress-jenilia

அதன் பின்னர் உத்தமபுத்திரன், சென்னைக் காதல், வேலாயுதம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து தற்பொழுது முன்னணி நடிகையாக உள்ளார்.

முன்னாள் முதலமைச்சர்

இந்நிலையில், இவர் கடந்த 2012-ம் ஆண்டு ரித்தேஷ் தேஷ்முக்கை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு தற்பொழுது 2 குழந்தைகள் உள்ளனர். இச்சமையத்தில் இவரது காதல் திருமணம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து, ஜெனிலியாவின் கணவரான ரித்தேஷ் தேஷ்முக், மஹாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக் என்பவரின் மகன்.

ex-cm-reject-actress-jenilia

இவர்கள் காதலுக்கு ரித்தேஷின் தந்தை சம்மதம் தெரிவிக்கவில்லை, அதனால் இவர்கள் பிடிவாதமாக நின்று இருவரும் சமாதானம் செய்து சம்மதம் வாங்கினர். அதன்பிறகு தான் 2012-ல் வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது.