எனக்கு ‘பத்ம பூஷன்’ விருது வேண்டாம்.. அதை நான் புறக்கணிக்கிறேன்.. - முன்னாள் முதலமைச்சர் அதிரடி
மத்திய அரசின் பத்ம பூஷன் விருதை புறக்கணிப்பதாக மேற்குவங்க முன்னாள் முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்ஜி அறிவித்திருக்கிறார்.
பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த, சிறந்த முறையில் பணியாற்றிய 128 பேருக்கு பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில், குடியரசு தினத்தை முன்னிட்டு கல்வி, சமூக சேவை, பொது நிர்வாகம், அறிவியல் - தொழில்நுட்பம், இலக்கியம், விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சிறந்த சேவை புரிந்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் பத்ம விருதுகள் வழங்கப்படும்.
இந்தாண்டுக்கான விருதுகள் பெறுவோர் பட்டியலை, மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு 128 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. பத்ம விபூஷன் விருது 4 பேருக்கும், 17 பேருக்கு பத்ம பூஷன் விருதும், 107 பேருக்கு பத்மஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தைச் சேர்ந்த 7 பேருக்கு பத்மஸ்ரீ விருது பெற இருக்கிறார்கள்.
இந்நிலையில், பத்ம பூஷன் பிரிவில் விருது அறிவிக்கப்பட்டுள்ள மேற்கு வங்க முன்னாள் முதமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்ஜி விருதை புறக்கணிக்க போவதாக அறிவித்திருக்கிறார்.
இது குறித்து அவர் கூறுகையில், பத்ம பூஷன் விருது பற்றி தனக்கு எதுவும் தெரியாது. அதைப்பற்றி யாரும் எதுவும் என்னிடம் கூறவில்லை. சொல்லவில்லை. தனக்கு பத்ம பூஷன் வழங்கப்பட்டால், அதை ஏற்கப்போவதில்லை என்றார்.
புத்ததேவ் பட்டாச்சார்யாவுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்ட ஒரு சில நிமிடங்களில் அந்த விருது வேண்டாம் என்று அவர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.