திமுக இல்லையென்றால்...கார்த்தி சிதம்பரம் டெபாசிட் வாங்கமாட்டார் - ஈவிகேஎஸ் இளங்கோவன் விமர்சனம்!!
கூட்டணி
தேசிய அளவில் வலுவான ஒரு கூட்டணியாகவே உள்ளது திமுக - காங்கிரஸ் கூட்டணி. அதே நேரத்தில் தமிழக காங்கிரஸ் கட்சிக்குள் உரசல்கள் அவ்வப்போது வெளிப்பட்டு கொண்டே இருக்கின்றன.
நடந்த முடிந்த மக்களவை தேர்தலில் தொகுதி பங்கீடு என்பது காங்கிரஸ் - திமுக கட்சிகளுக்கு இடையே பெரிய தலைவலியாகவே இருந்தது. காரணம், தொடர்ந்து பல இடங்களில் காங்கிரஸ் கட்சிக்கே வாய்ப்பு அளிக்கப்படுவதால், திமுகவினர் வேதனையில் இருப்பதாக கூறப்பட்டது.
ஆனால், தேர்தல் சுமுகமாக முடிவடைந்து 40/40 திமுக - காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றுவிட்டது. இந்த சூழல் தான், தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக கருதப்படும் ஈவிகேஎஸ் இளங்கோவன் சிவகங்கை மக்களவை காங்கிரஸ் உறுப்பினரான கார்த்தி சிதம்பரம் குறித்து விமர்சனங்களை வைத்துள்ளார்.
டெபாசிட்
தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் இந்த விமர்சனத்தை அவர் வைத்துள்ளார். அவர் பேசியது வருமாறு,
தெரியுமா உங்களுக்கு - "ராமர் தீவிரமான அசைவ பிரியர்" - ராமாயணத்திலே இருக்கு பாருங்க - கார்த்தி சிதம்பரம்..!
சிவகங்கையில் இருந்த அத்தனை காங்கிரஸினரும் தேர்தலுக்கு முன்னர் டெல்லி சென்று கார்த்திக்கு வாய்ப்பு வழங்கக்கூடாது என்றார்கள். பல எதிர்ப்புகளை மீறி அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.
திமுக உதவி செய்யவில்லை என்றால் டெபாசிட் பெறுவதுகூட பெரிய விஷயமாக இருந்திருக்கும். முழுக்க முழுக்க அவருக்காக திமுகவினரே உழைத்தார்கள் என்று பேசியுள்ளார்.