ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காலமானார் - அரசியல் தலைவர்கள் இரங்கல்!

E. V. K. S. Elangovan M K Stalin Chennai Erode
By Sumathi Dec 14, 2024 04:30 AM GMT
Report

உடல்நலக்குறைவு காரணமாக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காலமானார்.

ஈவிகேஎஸ் இளங்கோவன்

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக ஈவிகேஎஸ் இளங்கோவன் இருந்தார் . காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் என பல பொறுப்புகளை வகித்துள்ளார்.

evks elangovan

தனது மகன் திருமகன் ஈ.வே.ரா. காலமானதை தொடர்ந்து, இடைத்தேர்தலில் வெற்றிபெற்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எம்.எல்.ஏ ஆக இருந்தார். காய்ச்சல் மற்றம் சளி தொல்லையால் பாதிக்கப்பட்ட இவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

தவெக நிர்வாகிகளுக்கு அதிரடி உத்தரவு போட்ட விஜய் - இனி அதற்கு அனுமதி பெற வேண்டும்!

தவெக நிர்வாகிகளுக்கு அதிரடி உத்தரவு போட்ட விஜய் - இனி அதற்கு அனுமதி பெற வேண்டும்!

உடல்நிலை பாதிப்பு

தொடர் பரிசோதனையில் அவருக்கு நுரையீரல் பகுதியில் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இளங்கோவனை முதல்வர் மு.க.ஸ்டாலின்,

mk stlain - ma. subramaniyan

காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். இந்நிலையில் மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.