விஜய் திமுக அல்லது காங்கிரஸில் இணையலாம்; எதற்கு தனி கட்சி? ஈவிகேஎஸ் இளங்கோவன்

Vijay Indian National Congress DMK
By Karthikraja Oct 03, 2024 02:31 PM GMT
Report

விஜய்க்கு பதவி ஆசை இருந்தால் வெளிப்படையாக சொல்லி விடலாம் என ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

ஈவிகேஎஸ் இளங்கோவன்

ஈரோடு காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மகளிரணி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் மாநில தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கலந்து கொண்டார்.

evks elangovan

அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "மதுவிலக்கு ஒரு மாநிலத்தில் மட்டும் செய்துவிட முடியாது என்றும் முழுமையான மது விலக்கு இந்தியாவில் இருந்தது இல்லை. அதிக அளவில் மதுக்கடைகளை மூடினால் கள்ளச்சாராயம் பெருகும். 

விஜய் பெரியார் சிலைக்கு மாலை போட இதுதான் காரணம் - எச்.ராஜா

விஜய் பெரியார் சிலைக்கு மாலை போட இதுதான் காரணம் - எச்.ராஜா

மது விலக்கு

சாராயம் குடித்து பழகியவர்கள் 80% பேர் அடிமையாக உள்ள நிலையில், சாராயம் கொடுக்கவில்லை என்றால் மனம் உடல்நிலை கெட்டு போய்விடும் என்பதால், கடுமையான பிரச்சாரம் மூலம் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி முயற்சி செய்ய வேண்டும். மதுவிலக்கு என சொல்லும் குஜராத் மற்றும் பீகார் மாநிலத்தில் சாராயம் ஆறு போல ஓடிக்கொண்டுள்ளது. 

evks elangovan

நடிகர் விஜய்யை என் மகனாக பார்க்கிறேன். அவருக்கு சொல்வதென்றால் இப்போது எல்லோருடைய வீட்டுப் பிள்ளையாக நடிகர் விஜய் உள்ள நிலையில் சின்ன வட்டத்தை போட்டுக் கொண்டு அதில் இருப்பேன் என்று சொன்னால் யார் அதை ஏற்றுக்கொள்ளவார்கள்?

விஜய் கட்சி

விஜய் முதலில் எதற்காக கட்சி ஆரம்பிக்கிறார்? ஒரு கொள்கையை வைத்து கட்சி ஆரம்பிப்பதுதான் உலக வரலாறு. எந்த கட்சியை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள். ராஜாவும் சாதாரண குடிமகனும் சமம் என்ற நோக்கில் தான் கம்யூனிஸ்ட் கட்சி ஆரம்பிக்கப்பட்டது. காங்கிரஸ் பேரியக்கம் சுதந்திரம் கிடைக்கவும் உலக வல்லரசு நாடாக இந்தியா வலிமை பெற வேண்டும் என்ற கொள்கையில் தொடங்கப்பட்டது.

அதே போல் தமிழ் மொழி வாழவும் தமிழ்நாடு மிகப்பெரிய வளர்ச்சி பெற வேண்டும், இந்தி திணிப்பு கூடாது என்பதற்காகதான் திமுக மற்றும் திராவிட கட்சிகள் தொடங்கப்பட்டது. ஒவ்வொரு கட்சி ஆரம்பிக்கப்பட்டதற்கும் மூலக்கரு உள்ளது. ஆனால் இதெல்லாம் விஜய்க்கு புரியவில்லையோ? நடிகர் விஜய் கொடியியல் உள்ள இரண்டு யானைக்கு என்ன விளக்கம் என்று சொல்லவில்லை.

கொள்கைகள் அறிவிக்காமல் எப்படி மாநாடு நடத்தப்படுகிறது? எம்எல்ஏ, எம்பி பதவி மீது ஏதாவது ஆசை இருந்தால் வெளிப்படையாக சொல்லிவிட்டு செல்ல வேண்டிய தானே?மேலும், நீட் எதிர்ப்பு, பெண் சுதந்திரம் என்று சொல்லக்கூடிய நடிகர் விஜய், காங்கிரஸ் கட்சியில் இணைந்து விட வேண்டும் என்றும், அல்லது நடிகர் விஜய் சொல்லும் கொள்கைகள் காங்கிரஸ்லும் திமுகவில் இருக்கும் நிலையில் , எந்த கட்சி பிடித்ததோ, அதில் இணைந்து விடாமல், எதற்காக தனி ராஜ்யம்" என கேள்வி எழுப்பினார்.