2மணி நேரத்திற்கு ஒரு பெண் வன்புணர்வு - பகீர் கிளப்பும் ஆய்வு!
இரண்டு மணிநேரத்திற்கு ஒரு பெண் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
பாலியல் வன்கொடுமை
பாகிஸ்தான் நாட்டில் உள்ள செய்தி தொலைக்காட்சி சேனல் ஒன்று புலானாய்வு விசாரணையை நடத்தியது. உள்துறை அமைச்சகம், மனித உரிமைக்கான அமைச்சகம் ஆகியவற்றில் இருந்து தரவுகளை கொண்டு இந்த ஆய்வு பல்வேறு அதிர்ச்சி தரும் முடிவுகளை வெளியிட்டுள்ளன.
அதன்படி, பாகிஸ்தான் நாட்டில் 2017 முதல் 2021 காலகட்டத்தில் 21,900 பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். அதாவது சராசரியாக நாள்தோறும் 12 பெண்களும் அல்லது, இரண்டு மணிநேரத்திற்கு ஒரு பெண்ணும் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகிறார்.
பாகிஸ்தான்
அதேவேளை இந்த குற்றங்கள் நிரூபணங்கள் ஆகி தண்டனை பெறும் விகிதமானது மிகக் குறைவாகவே உள்ளது. 2022ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்காக காவல்துறை 2,856 வழக்குகளை பதிவு செய்துள்ளன.
ஆனால் இதில் வெறும் 4 சதவீத வழக்கு மட்டுமே விசாரணைக்கு சென்றுள்ளது. இந்த காலகட்டத்தில் பாலியல் குற்ற வழக்கில் தண்டனை பெற்றவர்கள் வெறும் 0.2 சதவீதத்தினர் மட்டுமே. அதேபோல், பாகிஸ்தானில் கடந்த 4 ஆண்டுகளில் 1,957 ஆணவ கொலைகள் நிகழ்ந்துள்ளன.
ஆய்வு தகவல்
ஐக்கிய நாடுகள் சபையின் ஆய்வின் படி பெண்களுக்கு எதிராக மனநிலையுடன் நீதிமன்ற நடவடிக்கைகள் நடைபெறும் நாடுகளில் பாகிஸ்தான் முதல் இடத்தில் உள்ளது. அதேபோல், உலக பொருளாதார அமைப்பின் ஆய்வின் படி,
பாலின ரீதியாக சுரண்டல் அதிகம் கொண்ட நாடுகளின் பட்டியலில் ஆப்கானிஸ்தானுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் பாகிஸ்தான் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.