உடும்பை கூட விட்டு வைக்காத இளைஞர்கள் : பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்
மகாராஷ்ட்ராவில் உடும்பை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் கோதேன் கிராமம் அருகே ஷாய்தரி புலிகள் காப்பக வனப்பகுதி உள்ளது. இங்கு இன்றைய தினம் சந்தேகத்துக்கு இடமாக 3 இளைஞர்கள் சுற்றித்திரிந்தனர். அவர்களை வனத்துறையினர் அழைத்து விசாரித்ததில் மூவரும் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த வேட்டைக்காரர்கள் என்பது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து அவர்களிடம் இருந்த செல்போன்களை வாங்கி வனத்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது, சில வாரங்களுக்கு முன்பு இந்த வனப்பகுதிக்கு வந்திருந்த அவர்கள் அங்கிருந்த பெரிய வகை பல்லியான உடும்பை பாலியல் வன்புணர்வு செய்ததை வீடியோவாக எடுத்து வைத்திருந்தனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த வனத்துறையினர் 3 பேரையும் கைது செய்தனர். இந்நிலையில் வன விலங்குகளை பாலியல் வன்புணர்வு செய்தால் எந்த வகையான தண்டனைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதியலாம் என்பது குறித்து சட்ட நிபுணர்களிடம் ஆலோசனை நடத்தி வருவதாக வனத்துறை உயரதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
மேலும் உடும்பானது பல்லிகள் பாதுகாக்க வேண்டிய உயிரினங்களின் பட்டியலில் வருவதால், இவர்களின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 7 ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது.