ஐரோப்பாவில் குடிபெயர விருப்பமா? ரூ 27 லட்சம் வழங்கும் நாடு - விவரம் இதோ..
ஐரோப்பாவில் குடிபெயர விரும்புவோருக்கு நாடொன்று ரூ.27 லட்சம் வழங்குகிறது.
ஐரோப்பா குடியேற்றம்
இத்தாலியில் டஸ்கனி என்ற பிராந்தியம் உள்ளது. இங்கு மலைவாழ் மற்றும் கிராமப்புற சமூகங்களுக்குச் செல்லும் மக்களை ஊக்குவிக்கும் விதமாகத் திட்டம் ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, இந்த பகுதிகளுக்குச் சென்று குடியேற விரும்புவோருக்கு அதிகபட்சமாக இந்திய மதிப்பில் ரூ. 27 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இதன்மூலம் அந்தப் பகுதியில் வீட்டைப் புதுப்பித்துக் கொள்ளலாம். இதற்காக சுமார் 30 கோடி ரூபாய்க்கும் அதிகமாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மானிய விவரம்
இத்தாலி குடிமக்கள் அல்லது ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த குடிமக்கள் அல்லது ஐரோப்பாவில் குறைந்தது 10 ஆண்டுகளுக்கு வசிக்கும் உரிமையை வைத்திருக்கும் வெளிநாட்டினர் ஆகியோரில் யாரேனும் விண்ணப்பம் செய்யலாம்.
இதில் தகுதி பெறுவோர் தாங்கள் செல்லும் மலை அல்லது கிராமப் பகுதியில் உள்ள இடத்தைத் தங்களது நிரந்தர வசிப்பிடமாக மாற்றிக் கொள்ள வேண்டும்.
ஜூலை 27 ஆம் தேதி பிற்பகல் 1 மணியுடன் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் முடிவடைகிறது. கிராமப்புறங்களில் மக்கள் தொகை பெருக்கத்தை அதிகரிப்பதற்காக இந்த முயற்சி மேற்கொள்ளப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது.