மக்களே உஷார்..527 இந்திய உணவு பொருட்களில் புற்றுநோய் உண்டாக்கும் ரசாயன கலப்பு!
527 இந்திய உணவு பொருட்களில் புற்றுநோய் உண்டாக்கும் ரசாயனம் கலந்திருப்பதாக தெரியவந்துள்ளது.
இந்திய உணவுகள்
இந்தியவில் தயாரிக்கப்படும் பல உணவு பொருட்களில் நச்சுக்கள் கலந்திருப்பதாக தொடர்ந்து கண்டறியப்பட்டு வருகிறது. பஞ்சு மிட்டாய்,கோபி மஞ்சூரியன், எவரெஸ்ட தூள் ஆகிய பொருட்களில் உடம்பிற்கு கேடு விளைவிக்கும் ரசாயனம் இருந்ததாக ஆய்வுகளில் தெரியவந்தது.
அந்த வகையில், ஐரோப்பிய யூனியன் உணவுப் பொருட்களில் உள்ள நச்சுப் பொருட்கள் குறித்த ஆய்வு மேற்கொண்டது. அதில் பெரும்பாலும் எத்திலீன் ஆக்சைடு என்ற நச்சுப் பொருள் அதிகளவில் உணவுப் பொருட்கள் இருப்பதை கண்டறிந்துள்ளனர். இதன் காரணமாக மரபணு ரீதியான நோய்கள் ஏற்படக்கூடும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
புற்றுநோய் ரசாயனம்
இதனையடுத்து, கடந்த 1991ம் ஆண்டு முதல் ஐரோப்பிய யூனியனில் இந்த நச்சுப் பொருட்கள் உள்ள உணவுப் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இருப்பினும், கடந்த ஒரு சில ஆண்டுகளாக எத்திலீன் ஆக்சைடு கலவை கொண்ட உணவு வகைகள் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்தன.
அதன்படி, தற்போது ஐரோப்பிய யூனியன் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட ஆயிரக்கணகான பொருட்களை ஆய்வு நடத்தியபோது,527 இந்திய உணவுப் பொருட்களில் தடை செய்யப்பட்ட எத்திலீன் ஆக்சைடு நச்சுப்பொருள் இருப்பதாக தெரியவந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.