கணவரின் மரணம்; சாப்பாட்டிற்கே வழியில்லாத கஷ்டம் - பிரபல நடிகை வேதனை!
நடிகை சத்யபிரியா வாழ்க்கையில் அனுபவித்த கஷ்டங்கள் குறித்து பகிர்ந்துள்ளார்.
சத்யபிரியா
‘மஞ்சள் முகமே வருக’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சத்யபிரியா. அதன்பின், பேரும் புகழும், கண்ணன் ஒரு கை குழந்தை, அஞ்சலி, ரிக்ஷா மாமா, ரோஜா, சீவலப்பேரி பாண்டி, பாட்ஷா உள்ளிட்ட பல படங்கள் மூலம் பிரபலமானார். 350க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
தொடர்ந்து புன்னகை’ ‘கோலங்கள்’ ‘ரோஜா கூட்டம்’ உள்ளிட்ட சீரியல்கள் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்தார். தற்போது சன் டிவி எதிர்நீச்சல் சீரியலில் விசாலாட்சி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தெலுங்கு பட தயாரிப்பாளர் எஸ். என். முருகன் என்பவருடன் காதல் ஏற்பட்டு,
பர்சனல் லைஃப் பக்கம்
வீட்டில் சம்மதம் தெரிவிக்காததால் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு மகனும், மகளும் உள்ளனர். திடீரென இவரது கணவர் புற்றுநோய் ஏற்பட்டு உயிரிழந்தார். இந்நிலையில் இவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில்,
மருத்துவ வசதிக்கு கூட பணம் இல்லாமல் ரொம்பவே கஷ்டப்பட்டேன். அப்போதுதான் சில தெலுங்கு படங்களுக்கு டப்பிங் கொடுத்தேன். சில குணச்சித்திர வேடங்களிலும் நடித்தேன். அந்த நேரத்தில் கணவர் இறந்தது ரொம்பவே சோகத்தை ஏற்படுத்தியது.
அவரது உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் நேரத்தில் தான் தமிழில் மீண்டும் நடிக்க தொடங்கினேன். ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஓட ஜோடியாக நடித்த நான் அம்மா மாமியார் கேரக்டரில் நடித்தேன் எனத் தெரிவித்துள்ளார்.