நிகழ்ச்சியில் கதறி அழுத்த நடிகை சினேகா - அதிகாரம் செய்த அண்ணன்கள்..!
நடிகை சினேகா தனது வீட்டில் அனுபவித்த கஷ்டங்கள் பற்றி நிகழ்ச்சி ஒன்றில் கதறி அழுத சம்பவம் ரசிகர்களை சோகமடைய செய்தது.
காதலித்து திருமணம்
தமிழ் சினிமாவில் 2001 ஆம் ஆண்டு என்னவளே திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் ரசிகர்களால் புன்னகை இளவரசி என்று அழைக்கப்பட்டார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வந்தார். பின்னர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்தார்.
பின்னர் 2009 ஆம் ஆண்டு அச்சமுண்டு அச்சமுண்டு என்ற திரைப்படத்தில் பிரசன்னாவுடன் இணைந்து நடித்தார். அப்போது இருவருக்கும் காதல் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தைகள் உள்ளன.
நிகழ்ச்சியில் கதறி அழுத சினேகா
இந்த நிலையில் சமீபத்தில் சினேகா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டிருக்கும் போது தான் பெண்ணாக பிறந்ததால் தன்னுடைய வீட்டிலேயே பட்ட கஷ்டங்கள் பற்றி மனம் திறந்து பேசி கண் கலங்கி அழுதார்.
அப்போது பேசிய சினேகா தான் வீட்டில் நான்காவதாக பிறந்ததாகவும், தான் பெண் குழந்தை என்பதால் தன்னுடைய பாட்டி தன்னை 3 நாட்களாக கையில் துாக்கவே இல்லை.
வீட்டில் எப்போதும் அண்ணன்களுக்கு மட்டும் தான் அதிகமான முக்கியத்துவம் இருக்கும் என்றும், நானாக இருந்தாலும் சரி தன்னுடைய அக்காள்களாக இருந்தாலும் சரி அவர்கள் அண்ணன்களுக்கு அடங்கி தான் போக வேண்டும் என உருக்கமாக தெரிவித்தார்.
அதிகாரம் செய்த அண்ணன்கள்
மேலும் வீட்டில் வேலைகளை செய்ய வேண்டும் என்று எப்போதும் தெரிவித்து கொண்டே இருப்பார்கள் என்றும், அண்ணன் ஹாயாக டிவி பார்த்துக் கொண்டிருக்கும் போது பக்கத்தில் தான் தண்ணீர் இருக்கும் ஆனாம் நாம் பக்கத்து அறையில் ஏதாவது வேலை செய்து கொண்டிருந்தாலும் வந்து எடுதுதுக் கொடுக்க வேண்டும் என அதிகாரம் செய்வதை வாடிக்கையாக வைத்து இருந்ததாகவும்,
உங்க பக்கத்துல தானே தண்ணி இருக்கு எடுத்து குடித்தால் என்ன அண்ணா என்று கேட்டால் நீ பொம்பள புள்ள தானே நீ வந்து எடுத்து கொடுக்கணும் தான் ஒரு ஆம்பள பையன் தண்ணி எடுத்துக் குடிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று திமிராக பேசுவாராம்.
அதிலும் இரண்டாவது அண்ணனை சொல்லவே வேண்டாம் என்றும் , தங்கள் வீட்டில் தன்னை ரொம்பவும் தொந்தரவு செய்து தன்னை பாடாய்படுத்துவது என்றால் தன்னுடைய இரண்டாவது அண்ணன் தான் என்று தெரிவித்துள்ளார்.