பொண்ணுங்க படிக்கறது எவ்வளவு முக்கியம்'னு தெரியுமா..? இறங்கி அடிக்கும் எதிர்நீச்சல் !!
சீரியல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜோவிகா கல்வி குறித்து பேசியது கடுமையாக எதிர்க்கப்பட்டு வருகின்றது.
ஜோவிகா செயல்
ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா கல்வி குறித்து பேசியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் கல்வி முக்கியமில்லை என அவர் தெரிவித்ததை பலரும் எதிர்த்து கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இது குறித்து சன் டிவி பிரபல சீரியலான எதிர்நீச்சல் தனது கருத்தை மறைமுகமாக பதிவு செய்துள்ளது. தமிழக தாய்மார்களின் தற்போதைய டாப் தொடர் என்றால் அது எதிர்நீச்சல் தான். அந்த தொடரில் ஆதிகுணசேகரனாக நடித்த நடிகர் மாரிமுத்து சமீபத்தில் உயிரிழந்த நிலையில், வேல ராமமூர்த்தி அந்த கதாபாத்திரத்திற்கு அவர் கொண்டுவரப்பட்டுள்ளார்.
எதிர்த்த எதிர்நீச்சல்
தொடர்ந்து TRP'யில் முதலிடத்திலேயே இருந்து வரும் இந்த தொடரின் சமீபத்திய பிரோமோவில் கல்வி குறித்த காட்சி ஒன்று இடம்பெற்றுள்ளது. இது நேரடியாக பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வைக்கப்பட்ட பதில் தான் என பலரும் கூறிவருகிறார்கள்.
பிக் பாஸ் மற்றும் எதிர்நீச்சல் தொடர் இரண்டும் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், நேர்மறையான கருத்துக்களை பரப்பி இதில் எதிர்நீச்சல் மக்களின் ஆதரவை பெரும் வேளையில், தனிப்பட்ட ஜோவிகாவின் கருத்தும் வைரலாகி நிகழ்ச்சிக்கு பெரும் எதிர்பார்ப்பை கொடுத்துள்ளது.