தொடரும் சோகம்...மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சமந்தா!!

Samantha
By Karthick Oct 13, 2023 05:01 AM GMT
Report

நடிகை சமந்தா மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்திகள் வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

நடிகை சமந்தா

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு திரையுலகிலும் முன்னணி நடிகையாக வளம் வருபவர் நடிகை சமந்தா. சென்னையை சேர்ந்த இவர் எந்தவித சினிமா பின்னணியும் இல்லாமல், தற்போது இந்தியாவெங்கும் பிரபலமான நட்சத்திரமாக திகழ்ந்து வருகிறார்.

samantha-admitted-in-hospital-again

தொழில் ரீதியிலான வாழ்க்கை சமந்தவிற்கு வெற்றிகரமாக அமைந்தது போல, தனிப்பட்ட வாழ்வு அமையவில்லை. விவகாரத்தில் முடிந்த காதல் திருமணம், மயோடிசிஸ் என்ற அரியவகை நோய் பாதிப்பு என பல பின்னடைவை சந்தித்து போராடி வாழ்ந்து வருகிறார் சாம்.

மீண்டும் சிகிச்சையா..?

சமீபத்தில் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ள அவர், தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பூஸ்டரின் நன்மைகள் பற்றிய குறிப்புகளையும் அந்த பதிவில் சமந்தா பகிர்ந்துள்ளார்.

samantha-admitted-in-hospital-again

இந்த சிகிச்சையின் மூலம் வெள்ளை ரத்த அணுக்கள் உற்பத்தி அதிகரிக்கிறது என குறிப்பிட்டு, நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது என்றும் தசைகளும், எலும்புகளும் வலுவடைகிறது என பகிர்நது கொண்டுள்ளார். பல்வேறு சிகிச்சைகளை மேற்கொண்டு வரும் சமந்தா விரைவில் ஹிந்தியில் சிடடேல் என்ற வெப் தொடர் மூலம் பாலிவுட்டில் அறிமுகவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

samantha-admitted-in-hospital-again