10 ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் வெடித்த எரிமலை - இந்தியாவை சூழ்ந்த இருள்!

India Ethiopia Flight
By Sumathi Nov 25, 2025 11:31 AM GMT
Report

10,000 ஆண்டுகளுக்குப் பிறகு மிகப்பெரிய எரிமலை வெடிப்பு ஏற்பட்டுள்ளது.

எரிமலை வெடிப்பு

எத்தியோப்பியாவில், அலே மலைத்தொடரில், ’ஹேலி குப்பி’ என அழைக்கப்படும் எரிமலை அமைந்துள்ளது. எரித்திரியா எல்லைக்கு அருகில் அடிஸ் அபாபாவிலிருந்து

volcano erupts

சுமார் 500 மைல் வடகிழக்கில் அமைந்துள்ள இந்த எரிமலை, கிட்டத்தட்ட 10,000 ஆண்டுகளில் முதல்முறையாக வெடித்ததாகக் கூறப்படுகிறது. இந்த எரிமலை வெடித்ததன் விளைவாக, வளிமண்டலத்தில் சாம்பல் மற்றும் சல்பர் டை ஆக்சைடு கலந்த புகை மூட்டம் பரவத் தொடங்கியது.

பூமிக்கு அடியில் சொகுசு பங்களாக்கள் - வைரலாகும் வினோத கிராமம்!

பூமிக்கு அடியில் சொகுசு பங்களாக்கள் - வைரலாகும் வினோத கிராமம்!

இந்தியாவுக்கு பாதிப்பு? 

குறிப்பாக, எரிமலையிலிருந்து வெளியேறிய சாம்பல் ஏமன், ஓமன், இந்தியா மற்றும் வடக்கு பாகிஸ்தான் எல்லைப் பக்கம் நகர்ந்ததாகக் கூறப்படுகிறது. முதலில் குஜராத்தில் நுழைந்த சாம்பல் புகை, பின்னர் ராஜஸ்தான், டெல்லி, ஹரியானா,

பஞ்சாப் வழியாக இன்று மாலை சுமார் 7:30 மணியளவில் இந்திய வான்பரப்பை விட்டு வெளியேறி, சீனாவிற்குள் நுழைய வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்த எரிமலை சாம்பல் புகையினால், பெரும்பாலான விமான சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக

இண்டிகோ, ஆகாசா ஏர், ஸ்பைஸ் ஜெட், ஏர் இந்தியா போன்ற நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இந்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகமும் (DGCA), எரிமலைச் சாம்பல் பாதித்த வான் பரப்புகளில் மறு அறிவிப்பு வரும் வரை விமான சேவைககளை இயக்க வேண்டாம் என எச்சரித்துள்ளது.