கரப்பான் பூச்சி காபி; ஒரு கப் இவ்வளவா? முண்டியடிக்கும் இளைஞர்கள்!

China
By Sumathi Nov 19, 2025 05:10 PM GMT
Report

கரப்பான் பூச்சி தூள் கலந்த புதிய காபியை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கரப்பான் பூச்சி காபி

சீனாவின் பெய்ஜிங்கில் உள்ள ஒரு பூச்சி அருங்காட்சியகம், கரப்பான் பூச்சி தூள் மற்றும் உலர்ந்த கோதுமைப் புழுக்களைக் கொண்ட காபியை அறிமுகப்படுத்தியுள்ளது.

கரப்பான் பூச்சி காபி; ஒரு கப் இவ்வளவா? முண்டியடிக்கும் இளைஞர்கள்! | Cockroach Coffee Launched In China Rs 560

இங்கு காபி கடையில் விற்கப்படும் இந்தக் காபி ஒரு கப் 45 யுவான் (இந்திய மதிப்பில் தோராயமாக 560 ரூபாய்) விலைக்கு விற்கப்படுகிறது. இந்தக் காபியின் மேல் அரைக்கப்பட்ட கரப்பான் பூச்சி தூள் தூவப்படுகிறது. உலர்ந்த மஞ்சள் கோதுமைப் புழுக்களும் சேர்க்கப்பட்டுள்ளன.

விமானத்தில் குழந்தைக்காக தாய் செய்த செயல் - மிரண்ட பயணிகள்

விமானத்தில் குழந்தைக்காக தாய் செய்த செயல் - மிரண்ட பயணிகள்

என்ன பலன்? 

இந்தக் காபியில் பயன்படுத்தும் அனைத்துப் பொருட்களும் பாரம்பரிய மூலிகைக் கடைகளில் இருந்து வாங்கப்பட்டவை என்றும், பாதுகாப்புப் பிரச்சினை எதுவும் இல்லை என்றும் அருங்காட்சியகம் வலியுறுத்தியுள்ளது.

கரப்பான் பூச்சி காபி; ஒரு கப் இவ்வளவா? முண்டியடிக்கும் இளைஞர்கள்! | Cockroach Coffee Launched In China Rs 560

பூச்சி காபியைச் சுவைக்க இளைஞர்கள் தான் அதிக அளவில் வருகிறார்கள். தற்போது, ஒரு நாளைக்குச் சராசரியாக 10 கப் காபி விற்பனையாகிறது.கரப்பான் பூச்சி தூள் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவும் . புரதம் நிறைந்த உணவான கோதுமைப் புழுக்கள் நோய் எதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்தும் எனக் கூறப்படுகிறது.

கரப்பான் பூச்சி காபியைத் தவிர, அருங்காட்சியகம் பலவகையான பூச்சிகளைப் பயன்படுத்திப் பல்வேறு பானங்களை விற்பனை செய்கிறது.