என் குடும்பத்தை பற்றி பேச வேண்டாம் - கல்யாண ராணி சத்யா
பலரை திருமணம் செய்து ஏமாற்றிய ஈரோட்டை சேர்ந்த சத்யா என்ற பெண்ணின் செய்தி வெளியாகி அதிரவைத்துள்ளது.
சத்யா
ஈரோடு கொடிமுடி ஒத்தக்கடை பகுதியை சேர்ந்தவர் சத்யா (வயது 35). திருமணமாகி ஒரு குழந்தை இருந்த நிலையில், இவரை கணவர் பிரிந்து சென்றுள்ளார்.
இதனை தொடர்ந்து இவர், அடுத்தடுத்த திருமணங்கள் செய்து பலரை ஏமாற்றியிருப்பதாக தகவல் வெளியாகி பலரை அதிரவைத்துள்ளது. திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்த இளைஞர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட அப்போது சத்யாவின் செயல்கள் வெளிப்பட்டுள்ளது.
கைது
அப்போது போலீஸ் விசாரணை நடத்தவே, சென்னை, கோவை, திருப்பூர், ஈரோடு என பல்வேறு இடங்களில் அரசு அதிகாரிகள் முதல் சாப்ட்வேர் என்ஜினீயர் வரை என சுமார் 53 பேரை சத்யா திருமணம் செய்து ஏமாற்றியுள்ளது தெரியவந்துள்ளது.
புதுச்சேரியில் தங்கியிருந்த சத்யாவை தனிப்படை அமைத்து காவல் துறையினர் கைது செய்துள்ளர்கள். தாராபுரம் அழைத்து வரப்பட்ட அவர், அங்கு இருந்து செய்தியாளர்களிடம் பேசினார்.
என் குடும்பத்தை...
அப்போது, சார் நா வெளிய வந்துட்டு உங்களுக்கு எல்லா ஆதாரத்தையும் காட்டி explain பண்றேன் சார். இத நீங்க எடுத்துக்கோங்க...தப்பில்ல. தயவு செஞ்சி என் family'ஐ அசிங்கப்படுத்த வேண்டாம்.
ரொம்ப அசிங்கப்படுத்துடீங்க சார்.எங்க அப்பா தற்கொலை பண்ணிகிட்டாரு'னு வரை பேசிட்டீங்க. இதுக்கு மேல பேச ஒன்னும் இல்லை. கடு இருக்குறவங்க என்னவேணாலும் பண்ணாலும்'னு நீங்க காட்டிடீங்க. அவ்ளோதாங்க சார்.