திருநம்பியை கரம் பிடித்த பட்டதாரி பெண் - பெற்றோர் கடும் எதிர்ப்பு
திருநம்பியை, இளம்பெண் சுயமரியாதை திருமணம் செய்துக் கொண்டார்.
திருமணம்
ஈரோடு, கோபிச் செட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் பட்டதாரி அருணா தேவி. இவர் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த அருண் பாஷ் என்பவரை கடந்த 6 மாதங்களாக காதலித்து வந்துள்ளார். அருண் பாஷ் பெண்ணாக பிறந்து ஆணாக மாறிய திருநம்பி.
இதற்கிடையில், இவர்களது காதலுக்கு அவர்கள் பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, இருவரும் தங்களின் வீட்டை விட்டு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக வெளியேறி ஒன்றாக தங்கி வசித்து வந்துள்ளனர்.
பெற்றோர் எதிர்ப்பு
மேலும், மனிதம் சட்ட உதவி மையத்தில் வைத்து காதலர் தினமான நேற்று சீர்திருத்த திருமணம் செய்து கொண்டனர். இச்சம்பவம் இணையத்தில் பேசு பொருளாகியுள்ளது.
சமீபத்தில் கேரளாவைச் சேர்ந்த திருநம்பி தான் கருவுற்று குழந்தை பெற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.