கடந்த ஆண்டே சுயமரியாதை திருமணம் : வைரலாகும் குக் வித் கோமாளி புகழின் புகைப்படம்
குக் வித் கோமாளி புகழ் கடந்த ஓராண்டுக்கு முன்பே தனது காதலி பென்ஸ் ரியாவை சுயமரியாதை திருமணம் செய்துகொண்டது தெரியவந்துள்ளது. விஜய் தொலைக்காட்சியில் கடந்த மூன்று வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் புகழ்.
குக் வித் கோமாளி புகழ்
கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தனக்கென தனி இடத்தை பிடித்தார். இதன் மூலம் பட வாய்ப்புகள் தற்போது புகழுக்கு குவிய தொடங்கியுள்ளது . இதனிடையே இவர் கோவை போத்தனூர் சேர்ந்த பென்ஸ் ரியாவை பல ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.
சில தினங்களுக்கு முன் கடலூர் விநாயகர் கோவிலில் வைத்து தனது காதலியை இவர் திருமணம் செய்து கொண்டார். இவரது திருமணத்தில் உறவினர்கள் , நண்பர்கள் என அனைவரும் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். அத்துடன் இணையதளத்திலும் புகழுக்கு வாழ்த்துக்கள் குவிந்தன.
சுயமரியாதை திருமணம் செய்த புகழ்
இந்நிலையில் புகழ் தனது காதலி பென்ஸ் ரியாவை கடந்த ஆண்டு கோவை பெரியார் படிப்பகத்தில் வைத்து சுயமரியாதை திருமணம் செய்து கொண்டது தெரியவந்துள்ளது.
தந்தை பெரியார் திராவிட கழக பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன் முன்னிலையில் இந்த காதல் ஜோடி சுயமரியாதை முறைப்படி பதிவு திருமணம் செய்து கொண்டுள்ளனர், தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.