விதவை என்றால் கோவில் புனிதம் கெட்டுடுமா? என்ன கொடுமை - நீதிபதி வேதனை!

Madras High Court Erode
By Sumathi Aug 05, 2023 04:57 AM GMT
Report

விதவை என்பதால் கோயிலுக்குள் நுழைய அனுமதி மறுப்பதா? என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

 அனுமதி மறுப்பு 

ஈரோடு, கோபி செட்டிபாளையத்தைச் சேர்ந்தவர் தங்கமணி என்ற பெண். இவர் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், "ஈரோடு மாவட்டம் நம்பியூர் தாலுக்காவில் பெரிய கருப்பராயன் கோயில் உள்ளது.

விதவை என்றால் கோவில் புனிதம் கெட்டுடுமா? என்ன கொடுமை - நீதிபதி வேதனை! | Erode Widow Denied Entry Into Temple High Court

எனது கணவர் இந்த கோயிலில் பூசாரியாக இருந்தார். பின்னர் அவர் இறந்துவிட்டார். தற்போது, இந்த கோயிலில் ஆடி திருவிழா வரும் 9 மற்றும் 10-ம் தேதிகளில் நடக்கிறது. இந்தத் திருவிழாவில் நானும் எனது மகனும் கலந்து கொள்ளவிருந்தோம்.

நீதிபதி காட்டம்

ஆனால் கோயில் நிர்வாகத்தினர் நான் கணவரை இழந்தவள் என்பதால் என்னை கோயிலுக்குள் வரக்கூடாது என்று தெரிவித்துள்ளனர். இதனால் நான் கோயிலுக்குள் செல்ல முடியவில்லை.எனவே, எனக்கும் என்னுடைய மகனுக்கும் உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதனை விசாரித்த நீதிபதி ஆனந்த வெங்கடேஷ், கணவரை இழந்தவர் என்பதால் கோயிலுக்குள் அனுமதி மறுப்பதா? இது தவறானது. மனுதாரரை கோயிலுக்குள் நுழைய அனுமதி மறுப்பது நியாயமற்றது. எனவே அவரை கோயில் திருவிழாவில் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும். அவருக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.