விதவை பெண்ணுடன் தொடர்பில் இருந்த காவலர் - கர்ப்பமாக்கி ஏமாற்றியதால் அதிர்ச்சி

chennai policeissue cheatingpolice womanharassment
By Petchi Avudaiappan Mar 12, 2022 01:09 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

செங்கல்பட்டில் கணவனை இழந்த பெண்ணை கர்ப்பமாக்கி காவலர் ஏமாற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கத்தைச் சேர்ந்தவர் ஷோபனா என்ற இளம்பெண்  தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் வந்தவாசியைச் சேர்ந்த எனக்கும் வினோத்குமார் என்பவருக்கும் கடந்த 8.12.2014 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. நாங்கள் இருவரும் காதலித்து வீட்டுக்குத் தெரியாமல் திருமணம் செய்து கொண்டோம்.

பின்னர் நான் 7 மாதம் கர்ப்பமாக இருந்தபோது என்னுடைய வீட்டுக்கு தெரிந்தது. குழந்தைப் பிறந்த பிறகு வினோத்குமார் வீட்டுக்கு தகவல் தெரியவந்தது. பின்னர் வீட்டில் உள்ளவர்கள் சம்மதிக்காததால் என்னுடன் தொடர்ந்து வாழ வினோத்குமார் மறுத்தார். அதுதொடர்பாக வந்தவாசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்த நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வினோத்குமாரை சிறையில் அடைத்தனர். 

பின்னர் சிறையில் இருந்து வெளியே வந்த அவர் ஒருநாள் பைக்கில் சென்ற போது விபத்தில் வினோத்குமார் இறந்து விட்டார். அதன்பின் 2018 ஆம் ஆண்டு புழல் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வரும்  விக்னேஷ்வர் என்பவர் பேஸ்புக் மூலம் எனக்கு அறிமுகமானார்.. 2021 ஆம் ஆண்டு விக்னேஷ்வர் என்னை திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு நாங்கள் இருவரும் கணவன் மனைவியாக வாழ்ந்தோம். பின்னர் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டதையடுத்து செங்கல்பட்டு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அவர் மீது புகார் அளித்தேன். போலீசார் எங்களை சேர்ந்து வாழச் சொல்லி அறிவுரை வழங்கினர்..

இந்த சமயத்தில் கர்ப்பமடைந்த தன்னிடம் கருவை கலைக்குமாறு விக்னேஷ்வர் கூறியதால்  நானும் மாத்திரைகளைச் சாப்பிட்டு கருவை கலைத்தேன். ஆனாலும் அவர் என்னுடன் சேர்ந்து வாழ மறுக்கிறார். எனவே விக்னேஷ்வர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஷோபனா கூறியுள்ளார். 

இதனிடையே காவலர் விக்னேஷ்வரிடம் உரிய விசாரணை நடத்தி மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டதோடு உயரதிகாரிகள் அவரை சஸ்பெண்ட் செய்திருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.