100 வயதை கடந்த தாய்-தந்தைக்கு திருமணம் - ஆயிரம் பிறை கண்ட தம்பதி!
100 வயதை கடந்த தந்தை-தாய்க்கு குடும்பத்தினர் திருமணம் செய்துவைத்துள்ளனர்.
கனக அபிஷேக விழா
ஈரோடு, குதிரைப்பாளி பகுதியைச் சேர்ந்தவர்கள் பெருமாள் வீரம்மாள் தம்பதியினர். இவர்களுக்கு 4 பெண்கள், 2 மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் 100 வயதை கடந்த வயதான தாத்தா பாட்டி இருவருக்கும் கனக அபிஷேக விழா முன்னெடுக்க மகன்கள், மகள்கள், பேரன், பேத்திகள், எள்ளு கொள்ளு பேரன்கள் என திருமணத்தை கோலாகலமாக நடத்தினர்.
இதுகுறித்து மகன்கள் கூறுகையில், எங்களை விவசாய வேலை என சிறு வேலைகளை செய்து வளர்த்து வந்த தாய் தந்தைக்கு திருமணம் செய்து பார்ப்பது என்பது அளவற்ற மகிழ்ச்சியாக இருப்பதுடன், இருவரும் உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும்,
நெகிழ்ச்சி சம்பவம்
தற்போது சைக்கிளில் செல்வதும் சிறு வேலைக்கு செல்வதும் வாடிக்கையாக வைத்திருப்பதாக தெரிவித்துள்ளனர். குடும்ப உறவுகளில் விரிசல் அதிகரித்து வரும் நிலையில் இந்த வயதான தம்பதியினர் 100வது கனக அபிஷேகம் காண்போர் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக 60 வயதை பூர்த்தி செய்த தம்பதியினருக்கு ஷஷ்டியப் பூர்த்தியும், 70 வயதை கடந்தவர்களுக்கு பீம ரத சாந்தியும், 80 வயது கடந்தவர்களுக்கு சதாபிஷேகமும், 96 வயதை கடந்தவர்களுக்கு கனகாபிஷேகமும் நடத்தப்படுவது வழக்கம்.