100-வது வயதில் தம்பதிக்கு திருமணம் - ஆசி பெற்ற குடும்பத்தினர்

Marriage
By Thahir Aug 30, 2022 10:43 AM GMT
Report

ஒசூர் அருகே நூறு வயது தம்பதிக்கு நடைபெற்ற திருமணத்தில் உறவினர்கள் ஊர்மக்கள் பங்கேற்று ஆசி பெற்றனர்.

திருமணம் 

வேகமாக சுழலும் விஞ்ஞான உலகில் மனிதர்களும் வேகமாக சுழன்று வருகின்றனர்.திருமணம் ஆயிரம் காலத்து பயிர் என்று முன்னோர்கள் சொல்வதுண்டு.

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவது என்பது ஐதிகம். பல இளைய தலைமுறைகளோ இன்று கல்யாணம் நாளை விவாகரத்து என்று இருந்து வரும் நிலையில் 100 வயது வரை மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த தம்பதிக்கு குடும்பத்தினர் திருமணம் நடத்தி வைத்து ஆசி பெற்றுள்ளனர்.

100வது வயதில் திருமணம் 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை டி.ஜி.தொட்டி கிராமத்தில் வசிக்கும் முனியப்பா(100), அவருடைய மனைவி குண்டம்மா(எ) மாரம்மா (96) ஆகியோர் நூறாண்டு கடந்து ஆரோக்கியத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.

Marriage

இவர்களின் நூற்றாண்டு வைரவிழாவை குடும்பத்தார் கொண்டாடினர்கள். தேன்கனிக்கோட்டை கவி லட்சுமி நரசிம்மசுவாமி கோயிலில் நடைபெற்ற விழாவில் நூறாண்டு கடந்து வைர விழா கொண்டாடும் தம்பதிக்கு புரோகிதர்கள் வேத மந்திரங்கள் ஓத கெட்டி மேளம் கொட்டி மலர் மாலைகள் அணிவித்து திருமணம் நடைபெற்றது.

Marriage

நூறு வயது கடந்த தம்பதியினருக்கு மகன்கள், மருமகள்கள், பேரன், பேத்திகள், கொள்ளூ பேரன், எள்ளு பேரன் என நான்கு தலைமுறையினர், உறவினர்கள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு ஆசி பெற்று வாழ்த்து பெற்றனர்.