ஈரோடு மாவட்ட ஆட்சியர் யார் தெரியுமா? முழு விவரம்!
ஈரோடு நகரம் முந்தைய கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது. 2008ல் மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டு, 2011ல் 109.52 சதுர கிலோமீட்டருக்கு விரிவுபடுத்தப்பட்டது. காவிரி மற்றும் பவானி ஆறுகளின் நதிக்கரையில் அமைந்துள்ளது.
ஈரோடு
8 சட்டம் ஒழுங்கு காவல் நிலையங்களும், ஒரு குற்றப் பிரிவு காவல் நிலையமும் இரண்டு போக்குவரத்துக் காவல் நிலையங்களும் உள்ளன.
ஈரோடு மேற்கு சட்டமன்றத் தொகுதி மற்றும் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிகள் என இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கும், ஈரோடு மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.
இங்கிருந்து ஜவுளிப் பொருட்களான துண்டுகள், படுக்கை விரிப்புகள், லுங்கிகள், மற்றும் மஞ்சள் ஆகியன உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
ஆட்சியர்கள் விவரம்
இந்த மாவட்டத்தின் தற்போதைய ஆட்சியராக ராஜ கோபால் சுன்கரா உள்ளார். கடந்த 2023ல் பதவியேற்றுக்கொண்டார். 2015ல் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாக இருந்தவர். இந்திய தொழில்நுட்ப நிறுவனம், காரக்பூரில் தொழில்நுட்ப இளங்கலை (B.Tech) மற்றும் வேளாண்மை மற்றும் உணவுப் பொறியியலில் தொழில்நுட்ப முதுகலை [M.Tech (Honors)] பட்டமும் பெற்றுள்ளார். மேலும் புது தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாகத்தில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார்.
முன்னதாக செயல் இயக்குனர், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம், ஆணையர், கோவை மாநகராட்சி, மண்டல துணை ஆணையர் (தெற்கு), பெருநகர சென்னை மாநகராட்சி (ஜிசிசி), கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி), கடலூர், சார் ஆட்சியர், பத்மநாபபுரம் போன்ற பதவிகளில் இருந்துள்ளார்.
இங்கு கூடுதல் ஆட்சியராக ஆர்.சதீஷ் தற்போது தருமபுரி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கு முன்னதாக ஆட்சியராக இருந்த எச்.கிருஷ்ணனுண்ணி(2021) தமிழக அரசின் நிதித் துறையின் இணைச் செயலாளராக மாற்றப்பட்டார். அப்போது தேனி மாவட்ட ஆட்சியராக இருந்தார்.
முதல்முறையாக 1979ல் வி.லட்சுமி ரத்தன் என்பவர் ஆட்சியராக பொறுப்பேற்றார். அதன்பின் எ.என். தியானேஸ்வரன், பி.வி.இராஜாராமன், எம், இராமகிருஷ்ணன்,கே. சம்பத்குமார், அருண் ராமநாதன் என வருடத்திற்கு ஒருவர் சட்டம் ஒழுங்கு காரணமாக மாற்றப்பட்டனர்.
இங்கு இதுவரை 35 ஆட்சியர்கள் பணியாற்றியுள்ளனர். அதில் எஸ்.பி.கார்த்திகா (2011), எஸ்.மதுமதி(2014) என்ற 2 பெண் ஆட்சியர்களும் பணியாற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.