பட்டியலினத்தை சேர்ந்தவர் என்பதால் இழிவுபடுத்திய மூத்த ஐஏஎஸ் அதிகாரி - தற்கொலைக்கு முயன்ற ஆட்சியர்!
மூத்த ஐஏஎஸ் அதிகாரி தனக்கு கீழ் வேலைபார்க்கும் கூடுதல் ஆட்சியரை இழிவுபடுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐஏஎஸ் அதிகாரி
ஈரோடு கூடுதல் ஆட்சியர் மனிஷ் ஐ.ஏ.எஸ், தான் சென்னை மாநகராட்சியில் சுகாதாரத்துறையின் துணை கமிஷனராக பணியாற்றினேன். அப்போது சுகாதாரத்துறை செயலாளராக இருந்த ககன் தீப் சிங் பேடிக்குக் கீழ் பணியாற்றியபோது அவரால் சாதிய ரீதியான வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக தனது குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இது குறித்து மனிஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்ட ட்வீட் “சென்னை மாநகராட்சியின் துணை ஆணையராக இருந்த என்னை, பட்டியலினத்தை சார்ந்தவன் என்பதால் ககன்தீப் சிங் பேடி துன்புறுத்தினார்." என்று கூறியுள்ளார்.
புகார்
இதனை தொடர்ந்து, அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாயாவது, "மாநகராட்சி அதிகாரிகள் கூட்டத்தில் வேண்டுமென்றே என்னை திட்டி அவமானப்படுத்தினார். இந்த சம்பவத்தால், தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு மன உளைச்சல் ஏற்பட்டது.

இந்த மனக்கசப்பில் இருந்து வெளியேற சிகிச்சை பெற்றேன். சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணனுக்கும் எனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் பிரச்சனையை உருவாக்க ககன்தீப் சிங் பேடி முயற்சி செய்தார்.
கோப்புகளில் வேண்டுமென்றே கையெழுத்திடாமல் இரவு வரை காத்திருக்க வைத்தார் “ என்றும் தெரிவித்திருந்தார். மேலும் இது குறித்து எம்.பி ரவிகுமார், இதனை உடனடியாக முதலமைச்சர் விசாரித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும்.
இவ்வாறான உயர் அதிகாரிகள் ஜாதி பாகுபாடு காட்டும் குற்றச்சாட்டு கவலையளிக்கும் ஒன்று என்றும் அவர் கூறியுள்ளார்.
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan