கர்நாடகாவில் பரபரப்பு! ஐஏஎஸ் அதிகாரிக்கும் ஐபிஎஸ் அதிகாரிக்கும் இடையே கடும் மோதல்
கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரி ரூபாவுக்கும் ஐஏஎஸ் அதிகாரி ரோகிணிக்கும் மோதல் முற்றியுள்ளது.
ஐஏஎஸ் ஐபிஎஸ் பெண் அதிகாரிகளுக்கு இடையே மோதல்
ரூபா தனது முகநுால் பக்கத்தில், மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அனுப்பிய தன் நிர்வாண புகைப்படத்தை ரோகிணி அழித்துள்ளார் என பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
கர்நாடாகவில் அறநிலையத்துறை கமிஷனராக இருப்பவர் ஐ.ஏ.எஸ் அதிகாரி ரோகிணி சிந்துாரி இவருக்கு வயது 39. இவர் கோலாலில் கலெக்டராக பணியாற்றிய போது ஐஏஎஸ் அதிகாரி ரவி 2015 ஆம் ஆண்டு தற்கொலை செய்தார்.
ரோகிணி உடனான காதல் விவகாரத்தால் தான் அவர் தற்கொலை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை முற்றிலும் மறுத்தார்.
இந்த நிலையில், இவர் மீது ஐபிஎஸ் அதிகாரி ரூபா அடுக்கடுக்காக 19 குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார். அதில் ரவி தற்கொலை விவகாரம் குறித்து கேள்வி எழுப்பியதுடன், 3 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு தன் அந்தரங்க புகைப்படங்களை அனுப்பி வைத்துள்ளார் என குற்றம் சாட்டி படங்கள் சிலவற்றையும் நேற்று முன்தினம் வெளியிட்டார்.
இதையடுத்து ரூபா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க உள்ளதாக ரோகிணி கூறினார். ரோகிணியின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டது தொடர்பாக ரூபா மீது ரோகிணியின் கணவர் சுதீர் ரெட்டி பெங்களூர் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார்.
ரூபாவின் குற்றச்சாட்டுகள் குறித்து ரோகிணியிடம் கேட்ட போது ரூபா விரைவில் குணமடைய வாழ்த்துக்கள் என்றார்.
முதலமைச்சர் அதிரடி உத்தரவு
இதனால் கடும் கோபமடைந்த ரூபா நேற்று தன் முகநுால் பதிவில், நான் விரைவில் குணம் அடைய வேண்டும் என ரோகிணி கூறி உள்ளார்.
மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அனுப்பிய தன் நிர்வாண புகைப்படத்தை அழித்தது பற்றி ஏதாவது கூறினாரா, சவாலை எதிர்கொள்ள அவருக்கு தைரியம் இல்லை. தன் கணவர் மூலம், என் மீது புகார் கொடுக்க வைத்துள்ளார்' என குறிபிட்டுள்ளார்.
இரு பெண் உயர் அதிகாரிகள் மோதலால் இக்கட்டாண சூழல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இருவரிடமும் விளக்கம் கேட்டு முதலமைச்சர் பவராஜ் பொம்மை, தலைமை செயலர் வந்திதா சர்மாவுக்கு உத்தரவிட்டார்.
ஐபிஎஸ் ரூபா மீது ஐபிஎஸ் அதிகாரி ரோகிணி புகார்
இதனிடையே நேற்று பெங்களூரு விதன் சவுதாவுக்கு சென்ற ரோகிணி சிந்துாரி, தலைமை செயலர் வந்திதா சர்மாவை சந்தித்து ரூபா மீது புகார் கடிதம் கொடுத்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரோகிணி என் மீது ரூபா கூறிய குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய். ஆதாரமற்றவை என் மீது உள்ள தனிப்பட்ட பகை காரணமாக இப்படி செய்கிறார். இது குறித்து தலைமை செயலரிடம் விளக்கம் அளித்து உள்ளேன் என்றார்.
அவர் சென்ற சிறிது நேரத்தில் விதான சவுதாவுக்கு வந்த ரூபாவும் தலைமை செயலரை சந்தித்து 35 நிமிடங்கள் பேசினார். ரோகிணி மீது 7 குற்றச்சாட்டுகள் அடங்கிய மூன்று பக்க புகார் மனுவை அளித்தார்.
ஐபிஎஸ் அதிகாரி ரோகிணி மீது ஐபிஎஸ் ரூபா புகார்
பின்னர் பேசிய ரூபா, ரோகிணி சிந்துாரி மீது எனக்கு தனிப்பட்ட பகை எதுவும் இல்லை. அவர் செய்த தவறுக்கு தண்டனை வேண்டும் என்று தான் கேட்கிறேன். அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து 15 நாட்களுக்கு முன்பே உயர் அதிகாரிகளுக்கு தகவல் அனுப்பினேன்.
அந்த தகவலை அவர்கள், அரசிடம் கொண்டு போகவில்லை. அவரை பாதுகாக்கும் முயற்சி நடக்கிறது. என் புகார் மீது கண்டிப்பாக விசாரணை நடைபெற வேண்டும்.
ரோகிணியால் என்னை போல் பல பெண் அதிகாரிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இது குறித்தும், தலைமை செயலர் வந்திதா சர்மாவிடம் கூறி உள்ளேன் என்றார்.