பாத்ரூம் கூட போக முடியல; ரிசர்வ் பெட்டியில் ஓசி பயணம் - வீடியோ வெளியிட்ட பெண்கள்!
முன்பதிவு பெட்டியில் பயணித்த 3 பெண்கள், அதில் ஏற்பட்ட கஷ்டங்களை வீடியோவாக வெளியிட்டுள்ளனர்.
முன்பதிவு பெட்டி
பாட்னா சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில் எர்ணாகுளத்தில் இருந்து காட்பாடிக்கு முன்பதிவு செய்த பெட்டியில் 13 பேர் பயணித்திருக்கின்றனர். இந்த ரயில் ஏறியது முதல் பட்ட அவதிகளை பெண்கள் வீடியோவாகவே வெளியிட்டுள்ளனர்.
அதில் 2 பெண்களும் பேசுகையில், எர்ணாகுளத்தில் ஏறியதில் இருந்து ஸ்லீப்பரில் படுக்க கூட முடியவில்லை. திருப்பூரில் ரயில் நின்ற போது 5 டிடிஆர் இருந்தனர். அவர்களிடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஓபன் டிக்கெட் எடுத்துவிட்டு அவ்வளவு பேரும் இந்த பெட்டியில் ஏறிவிட்டார்கள்.
எங்களால் சீட்டில் உட்கார கூட முடியவில்லை. தூங்க முடியவில்லை. டிடிஆரிடம் சென்று புகார் கொடுத்தால், எங்கு வேண்டுமானாலும் சென்று புகார் கொடுங்க. என்ன வேணாலும் பண்ணிக்கோங்க என்கிறார். ஆர்பிஎஃப் நபர்களிடம் கூறினால், எந்த ரியாக்ஷனும் இல்லை.
பெண்கள் வேதனை
193க்கு போனில் அழைத்தால், அது ஹோல்டிலேயே வைத்திருக்கிறார்கள். இரவு முதல் இப்போது வரை இப்படியே உட்கார்ந்து வந்துள்ளோம். ரிசர்வ் செய்து பணம் கொடுத்து வந்தால், உட்கார்ந்தே வர வேண்டுமா? வழிவிடு என்று சொன்னால் கூட வழி கொடுக்க மறுக்கிறார்கள்.
பெண்களால் கழிப்பறைக்கு கூட செல்ல முடியவில்லை. பாத்ரூம் கூட போக முடியாமல் இருப்பது எவ்வளவு கஷ்டம் தெரியுமா. தூங்குவோரை கூட தூங்கவிடாமல் அவர்களின் கால்களில் அமர்ந்திருக்கிறார்கள். பான் பராக்கெல்லாம் போட்டு துப்பிக் கொண்டே இருக்கிறார்கள்.
கொஞ்சம் கூட நாகரீகமே இல்லை. ஒரு சிலர் ஓபன் டிக்கெட் எடுத்தார்கள். ஒரு சிலர் டிக்கெட்டே எடுக்கவில்லை. டிக்கெட் எடுக்காதவர்களுக்கு அபராதம் மட்டுமே போடுகிறார்களே ஒழிய, அவர்களை இங்கிருந்து அப்புறப்படுத்த மறுக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளனர். இந்த வீடியோ வெளியாகி தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அறிவு இருக்கிறவங்களுக்கு தான் புரியும்... பார்வதியை வெளுத்து வாங்கிய கனி! அதிர்ச்சியில் சக போட்டியாளர்கள் Manithan
