ஆண்கள் கட்டாயம் 2 திருமணம் செய்யவேண்டும்.. இல்லையெனில் சிறை தண்டனை? - எந்த நாடு தெரியுமா?
இந்த நாட்டில் ஆண்கள் கண்டிப்பாக 2 திருமணம் செய்யவேண்டும் ஏந்தினரா பதிவு தற்பொழுது வைரலாகி வருகிறது.
2 திருமணம்
ஆப்பிரிக்கா கண்டத்தில் இருக்கும் எரித்திரியா நாட்டின் ஆண்கள் குறைந்தது 2 பெண்களையாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளதாக இணையத்தில் பரவ வருகிறது.
அவ்வாறு செய்யாவிட்டால் சிறை தண்டனை விதிக்கப்படும் என சட்டம் இயற்றப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த பதிவு சில நாட்களாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனால் பலர் இணையத்தில், "நான் எரித்திரியாவை நோக்கிச் செல்கிறேன், நீங்களும் வருகிறீர்களா?" என்று கமெண்ட் செய்து பரப்பி வருகின்றனர்.
அந்நாட்டின் பதில்
இந்நிலையில், அந்நாட்டு அரசாங்கம் எரித்திரியாவில் உள்நாட்டுப் போர் காரணமாக, ஆண்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும், ஆண்களை விட பெண்களின் மக்கள்தொகை அதிகமாக இருப்பதால், அரசாங்கம் இரண்டு திருமணம் என்ற பழங்கால பாரம்பரியத்தை அங்கீகரித்து அதை சட்டமாக்கியுள்ளது என்றும் அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.
இவாறு எந்த சட்டத்தையும் இயற்றவில்லை என்று கூறியுள்ளது. எரித்திரியா போலவே ஈராக் மற்றும் சூடான் நாட்டிலும் இது போன்ற சட்டம் அமலுக்கு வந்துள்ளதாக ஏற்கனவே சமூக ஊடக பதிவுகள் வைரலாகின. ஆனால் அது போன்ற சட்டம் எதுவும் நடைமுறைப் படுத்தப்படவில்லை என அந்நாடுகள் மறுப்பு தெரிவித்துள்ளன.