ஆடி பெருக்கில் வாழ்க்கை சிறக்க பெண்கள் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டியவை - இதை மறக்காம செய்யுங்கள்!
தமிழகத்தில் ஆடி பெருக்கு வர இருக்கும் நிலையில் கண்டிப்பாக இதனை தெரிந்துகொள்ளுங்கள்.
தம்பதிகள்
தமிழ் நாட்டில் திருமணம் முடிந்த பிறகு மூன்றாவது நாளில் புது பெண்ணிற்கு அவரது கணவர் வீட்டில் வைத்து தாலி கொடி மாற்றுவது பல ஆண்டுகளாக நடந்து வருகின்றது. இந்த சடங்கில் அப்பெண்ணின் தாலியுடன், லட்சுமி காசு, மணி ஆகியவற்றை சேர்த்து அவர்கள் அணிந்து கொண்டால் அவரை சுமங்கலியாக வாழும் பாக்கியம் உண்டாகும் என்பது ஐதீகம்.
பொதுவாக மூன்றாவது மாதத்தில் இதனை செய்வர், ஆனால் இதனை ஆடி பெருக்கன்று செய்தால் மிகவும் சிறப்பானதாக அமையும். மேலும் ஆடி பெருக்கில், நதிகளில் நீர் பெருகும் என்பது நம்பிக்கை அதனால் அகன்ற நதிகளில் வழிபாடும் நடைபெறும்.
பெண்கள் செய்யவேண்டியவை
இதனை தொடர்ந்து, புதியதாக திருமணம் ஆன தம்பதிகள் நதிக்கரையில் அன்று இரவு நிலாச்சோறு சாப்பிடும் பழக்கமும் உண்டு. இந்த நாளில் புதுமண தம்பதிகள் கோவிலுக்கு சென்று அவர்கள் தாலியை மாற்றி கொள்வது நல்லது. மேலும், திருமணம் ஆகாத பெண்கள், திருமணம் ஆக வேண்டும் என்று அம்மனை வேண்டி மஞ்சள் கயிறை மாட்டிக்கொள்வர்.
அவ்வாறு செய்வதன் மூலம் அடுத்த ஆடி மாதத்திற்குள் அவர்களுக்கு திருமணம் ஆகும் என்பது நம்பிக்கை. புதுமண பெண்கள் மஞ்சள் கயிறை இந்நாளில் மாற்றிக்கொண்டால் சிறப்பாக இருக்கும். கோவிலுக்கு செல்லமுடியாத பெண்கள் வீட்டிலேயே பலகாரங்கள் செய்து கோலமிட்டு காவிரியை, வைகையை, தாமிரபரணியை மனதில் நினைத்துக்கொண்டு வணங்கலாம்.
காலை 10.45 மணி முதல் மதியம் 01.15 மணி வரை இந்த நேரத்தில் எப்போது வேண்டுமானாலும் தாலிக் கயிற்றை மாற்றிக் கொள்ளலாம். மேலும், மதியத்திற்கு பிறகு வழிபாடு செய்யலாம் ஆனால் தாலி கயிறை மாற்றக்கூடாது.