தமிழகம் முழுவதும் இன்று ஆடிப்பெருக்கு விழா - காவேரி கரையோரங்களில் மக்கள் சிறப்பு வழிப்பாடு..!
தமிழகம் முழுவதும் இன்று ஆடிப்பெருக்கு விழாவையொட்டி காவேரி கரையோரங்களில் மக்கள் சிறப்பு வழிபாடு செய்து வருகின்றனர்.
இன்று ஆடிப்பெருக்கு
ஆடிப்பெருக்கு என்பது ஆடி மாதம் 18ஆம் நாள் தமிழக ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுவதைக் குறிக்கும் ஒரு பண்டிகை ஆகும்.
இன்று ஆடிப்பெருக்கு விழாவையொட்டி இன்று திருச்சி ஸ்ரீரங்கம் படித்துறை மற்றும் மதுரை, சேலம், உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள காவேரி கரையோரங்களில் மக்கள் சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றனர்.
விடுமுறை அறிவிப்பு
ஆடிப் பெருக்கு கொண்டாடப்படுவதை முன்னிட்டு தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவித்து தர்மபுரி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, இன்று ஆகஸ்ட் 3ம் தேதி ஆடிப்பெருக்கை முன்னிட்டு தர்மபுரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதனை ஈடுசெய்யும் வகையில் 27ம் தேதி சனிக்கிழமை பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இன்று அனைத்து பள்ளி, கல்லூரிகள் , அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் அரசு கருவூலங்களும், சார்நிலை கருவூலங்களும் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆடிப்பெருக்கிற்கு புதுமணத் தம்பதிகள், பொதுமக்கள் காவிரி ஆற்றங்கரையில் வழிபாடு நடத்துவர். காவிரி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக கடந்த 21 நாட்களாக ஆற்றில் பொதுமக்கள் இறங்க தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.