விரைவில் 1 கோடி இலக்கு - கையெழுத்து இயக்கத்தால் அண்ணாமலை மகிழ்ச்சி
விரைவில் ஒரு கோடி கையெழுத்து என்ற இலக்கை எட்டுவோம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை
மும்மொழிக் கொள்கை குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அரசுப் பள்ளி, தனியார் பள்ளி என்ற வித்தியாசமின்றி, ஏழை, பணக்காரர் என்ற பேதமின்றி,
அனைத்துக் குழந்தைகளுக்கும், தரமான, சமமான கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், தமிழக பாஜக, சமக்கல்வி கையெழுத்து இயக்கத்தை முன்னெடுத்தது.
கையெழுத்து இயக்கம்
ஒரு கோடி பேர் கையெழுத்து என்ற இலக்கு வைத்துத் தொடங்கப்பட்ட இந்த இயக்கம், தமிழக மக்கள் பேராதரவுடன், களத்திலும், இணைய தளம் வழியாகவும் சேர்த்து, 20 லட்சம் என்ற இலக்கை எட்டியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
தமிழக மக்கள் அன்புடனும் ஆதரவுடனும், விரைவில் ஒரு கோடி கையெழுத்து என்ற இலக்கை எட்டுவோம். சமக்கல்வியான மும்மொழிக் கல்வியை, நம் குழந்தைகள் பயிலும் தமிழக அரசுப் பள்ளிகளிலும் கொண்டு வருவோம் என குறிப்பிட்டுள்ளார்.