குஜராத் அரசை எதிர்த்து..! பில்கிஸ் பானு வழக்கு... அதிமுக வரவேற்பு

ADMK Gujarat Edappadi K. Palaniswami
By Karthick Jan 10, 2024 03:12 AM GMT
Report


பில்கிஸ் பானு வழக்கில் இரண்டு நாட்களுக்கு முன்பு விடுவிக்கப்பட்ட 11 பேரின் விடுதலையை உச்சநீதிமன்றம் ரத்து செய்திருந்தது.

பில்கிஸ் பானு வழக்கு

2002-ஆம் ஆண்டின் குஜராத் கலவரத்தில் போது, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பில்கிஸ் பானு, தொடர்ந்து மேல்முறையீடு வழக்கில், உச்சநீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

eps-welcomes-sc-verdict-in-bilkis-bano-case

குஜராத் அரசின் முடிவையும் வினவியுள்ள உச்சநீதிமன்றம், மாநில அரசிற்கு இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவருக்கு நிவாரண அளிக்கவோ, குற்றம்சாட்டப்பட்டவருக்கு பொதுமன்னிப்பு வழங்கவோ அதிகாரமில்லை என தெரிவித்திருந்தது.

கொளத்தூரில் அதிமுக போடும் ஸ்கெட்ச்..? பிரச்னையாகுமா முதல்வருக்கு..?

கொளத்தூரில் அதிமுக போடும் ஸ்கெட்ச்..? பிரச்னையாகுமா முதல்வருக்கு..?

அதிமுக வரவேற்கிறது

இந்த தீர்ப்பை அதிமுக வரவேற்பதாக எடப்பாடி பழனிசாமி வரவேற்றுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், 2002-ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் நடந்த இனக்கலவரத்தில் பில்கிஸ் பானு என்ற இசுலாமிய சகோதரி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு அவரது குழந்தை உள்பட

eps-welcomes-sc-verdict-in-bilkis-bano-case

குடும்பத்தினர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், தண்டிக்கப்பட்ட 11 குற்றவாளிகளை முன்கூட்டியே குஜராத் அரசு விடுவித்ததை எதிர்த்து, பாதிக்கப்பட்ட சகோதரி தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அந்த விடுதலையை ரத்து செய்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வரவேற்கிறது.