கொளத்தூரில் அதிமுக போடும் ஸ்கெட்ச்..? பிரச்னையாகுமா முதல்வருக்கு..?
வரும் நாடாளுமன்ற தேர்தலில் முதல்வர் முக ஸ்டாலினின் சொந்த தொகுதியான கொளத்தூரில் அதிக வாக்குகளை வாங்க முற்பட்டுள்ளது அதிமுக.
அதிமுக வியூகம்
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுக தீவிரமாக தயாராகி வருகின்றது. தேசிய ஜனநாயக கூட்டணியை விட்டு அக்கட்சி வெளியேறியுள்ள நிலையில், அண்மையில் பேசும் போது முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் வேட்பாளர் இன்று தேர்தலை அதிமுக சந்திக்கும் என கூறியிருந்தார்.
தற்போது வரை அதிமுக கூட்டணியில் SDPI மட்டுமே உறுதிப்படுத்தியிருக்கும் நிலையில், புதிய தமிழகம் கட்சியும் அதிமுக கூட்டணிக்கு வரவாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
கொளத்தூரில்..
இந்நிலையில், முதல்வரின் சொந்த தொகுதியான கொளத்தூரில் அதிகப்படியான வாக்குகளை பெற அதற்கான புது வியூகங்களை வகுத்துள்ளது.
அதன்படி, கொளத்தூர் தொகுதியில் புதிய பூத் அமைக்க அதிமுக முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. ஏற்கனவே உள்ள குழுவின் செயல்பாடு சரியில்லாத காரணத்தால், அதை கலைத்து புதிய குழு அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.