அதிமுகவில் தொடரும் பதற்றம் : ஓபிஎஸ் ஆதரவாளரான இபிஎஸ் ஆதரவாளர்

ADMK Edappadi K. Palaniswami O. Panneerselvam
By Irumporai Aug 19, 2022 04:55 AM GMT
Report

ஈபிஎஸ் ஆதரவாளராக இருந்த வேடசந்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன் ஓபிஎஸ்-க்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

ஓபிஎஸ்க்கு சாதகமான தீர்ப்பு

ஈபிஎஸ் தலைமையிலான ஜூலையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் தரப்பு உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில், ஓபிஎஸ் சாதகமாக நேற்று முன்தினம் தீர்ப்பு வந்தது.    

இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஓபிஎஸ், அன்பு சகோதரர் இபிஎஸ் மற்றும் நானும் சேர்ந்து சிறப்பாக வழிநடாத்தினோம். இரட்டை தலைமை பிரச்சனை இல்லை. மீண்டும் ஒற்றுமையுடன் செயல்பட விரும்புகிறேன் என்று ஈபிஎஸ்-க்கு அழைப்பு விடுத்தார். ஆனால் ஓபிஎஸ் அழைப்பினை ஈபிஎஸ் மறுத்தார்.

 ஓபிஎஸ் ஆதரவாளரான இபிஎஸ் ஆதரவாளர் 

இந்த நிலையில் ஈபிஎஸ் ஆதரவாளராக இருந்த வேடசந்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன் ஓபிஎஸ்- ஐ சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்து தனது ஆதரவை தெரிவித்துள்ளார் இந்த சம்பவம் அதிமுகவில் கட்சியினரிடையே பதட்டத்தை அதிகரித்துள்ளது.