தொகுதி பங்கீடு குறித்து எடப்பாடி பழனிசாமி (Video)

ADMK BJP
By Fathima Mar 03, 2026 06:02 AM GMT
Report

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.

அதிமுக அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணியிலும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.

இந்நிலையில் நேற்று திடீரென டெல்லி புறப்பட்டு சென்ற எடப்பாடி பழனிசாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார்.

தொகுதி பங்கீடு குறித்து எடப்பாடி பழனிசாமி (Video) | Eps Speaks About Seat Sharing Nda Alliance 

தமிழகத்தின் தேர்தல் களம் குறித்து விவாதித்ததாக தெரிகிறது, ஓ.பன்னீர்செல்வம் திமுக-வில் இணைந்தது குறித்தும், திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்தது குறித்தும் பேசப்பட்டதாக தெரிகிறது.

மேலும் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கு ஒதுக்கப்படவுள்ள தொகுதிகளின் எண்ணிக்கை குறித்து விவாதித்துள்ளனர்.

தவெக உடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தை? செல்வப்பெருந்தகை விளக்கம்

தவெக உடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தை? செல்வப்பெருந்தகை விளக்கம்


செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, எங்கள் கூட்டணி வலிமையானது, தேர்தல் குறித்து அமித்ஷாவுடன் ஆலோசனை நடத்தினேன்.

எங்கள் கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணைய வாய்ப்புள்ளது, அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம் என தெரிவித்துள்ளார்.