ஒரு முறை சொன்னதற்கே இப்படி..திமுக முதலமைச்சருக்கு மூளை இருக்கிறதா? இபிஎஸ் காட்டம்!

M K Stalin Tamil nadu Edappadi K. Palaniswami
By Swetha Aug 20, 2024 02:41 AM GMT
Report

கலைஞர் நாணயம் வெளியீட்டு விழாவை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சனம் செய்தார்.

இபிஎஸ் காட்டம்

இது தொடர்பாக ல் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், “கலைவாணர் அரங்கில் ரூ.100 நாணயம் வெளியிட்ட நிகழ்ச்சி தமிழ்நாடு அரசு நடத்திய அரசு விழா. அழைப்பிதழில் எந்த இடத்திலும் மத்திய அரசுத் துறையின் பெயர் இடம் பெறவில்லை.

ஒரு முறை சொன்னதற்கே இப்படி..திமுக முதலமைச்சருக்கு மூளை இருக்கிறதா? இபிஎஸ் காட்டம்! | Eps Slams Stalin For Kalaignar Centenry Coin Event

 அழைப்பிதழ் கலைஞர் 100 என்று இலச்சினையுடன், தமிழ்நாடு அரசு இலட்சினைதான் இடம் பெற்றுள்ளது. அனைத்துக்கும் மேலாக, அழைப்பிதழில் அனைவரையும் அழைத்தவர் தமிழ் நாடு அரசு தலைமைச் செயலாளர். எம்ஜிஆர், ஜெயலலிதா பற்றி பேச சிறிதும் தகுதி இல்லாதவர் மு.க.ஸ்டாலின் என்ற அவர்,

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் போயஸ் கார்டன் இல்லத்தை நினைவிடமாகவும், கடற்கரையில் அழகிய நினைவிடமும் அமைத்து, ஒவ்வொரு ஆண்டும் அம்மா அவர்களது நினைவாக மவுன அஞ்சலி செலுத்தி வருகிறோம்.

அதிமுக காணாம போய்டுமாம்.. கண்டுபிடிச்சு கொடு - பாஜக நிர்வாகிக்கு பதிலடி கொடுத்த ஈபிஎஸ்!

அதிமுக காணாம போய்டுமாம்.. கண்டுபிடிச்சு கொடு - பாஜக நிர்வாகிக்கு பதிலடி கொடுத்த ஈபிஎஸ்!

முதலமைச்சர்

தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்டு தேவையான நிதியைப் பெற வக்கில்லாமல், தன் அப்பாவின் நூற்றாண்டு விழா நாணய வெளியீட்டு விழாவுக்கு, மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க. தலைவர்களை வருந்தி வருந்தி அழைத்து,

ஒரு முறை சொன்னதற்கே இப்படி..திமுக முதலமைச்சருக்கு மூளை இருக்கிறதா? இபிஎஸ் காட்டம்! | Eps Slams Stalin For Kalaignar Centenry Coin Event

நிகழ்ச்சி நடத்திவிட்டு, அதை நாகரீகமாக சுட்டிக்காட்டிய என் மீது பாய்ந்து குதறியிருக்கிறார். என்று விமர்சித்தார். தொடர்ந்து, “சர்வதேச போதை மருந்து கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக்குடன் தொடர்புடைய தன் மகன், மருமகளைக் காப்பாற்றவும்,

புகார்களில் சிக்கியுள்ள தன் மருமகன் மற்றும் சில அமைச்சர்களை காப்பாற்றவும் ஸ்டாலின் யார் காலை பிடித்தாலும் அதிமுகவுக்கு எந்த கவலையும் இல்லை. எம்ஜிஆர் நூற்றாண்டு நாணய வெளியீட்டு விழாவிற்கு மத்திய அரசில் உள்ளவர்களை நான் அழைத்ததாகவும்,

ஒரு முறை..

ஆனால், மத்திய அரசு என்னை மதிக்கவில்லை என்றும் பொய் கூறியுள்ளார் ஸ்டாலின் என்ற அவர், எம்ஜிஆர் நினைவாக ரூ.100 நாணயம் வெளியிட்டோம். எங்களின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு நாணயம் வெளியிட்டது, விழாவை நாங்களே நடத்தினோம்..

ஒரு முறை சொன்னதற்கே இப்படி..திமுக முதலமைச்சருக்கு மூளை இருக்கிறதா? இபிஎஸ் காட்டம்! | Eps Slams Stalin For Kalaignar Centenry Coin Event

என் தலைமையிலான தமிழக அரசு நடத்தியது. மேலும், “பாஜகவுடன் கள்ள உறவு என எங்களைப் பார்த்து, மீண்டும் மீண்டும் மு.க.ஸ்டாலின் சொன்ன போது அவருக்கு இனித்தது. இப்போது, அவர்களைப் பார்த்து மீண்டும் மீண்டும் அல்ல,

ஒரு முறை சொன்னதற்கே மூளை இருக்கிறதா எனக் கேட்கிறார். அப்படி என்றால், நாங்கள் எத்தனை முறை விடியா திமுக முதலமைச்சருக்கு மூளை இருக்கிறதா ? என்று கேட்க வேண்டும். டெல்லிக்கு காவடி எடுத்து தப்பிவிடலாம் என்று நினைத்தால் புத்திசாலிகளான தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்” என்று அவர் தெரிவித்துள்ளார்.