எங்கள் கூட்டணி குறித்து வேண்டுமென்றே வதந்தி பரப்புகிறார்கள் - இபிஎஸ்
வரும் மக்களவை தேர்தலில் அதிமுக தலைமையில் நல்ல கூட்டணி அமையும் என எடப்பாடி பழனிசாமிதெரிவித்துள்ளார்.
செய்தியாளர் சந்திப்பு
இன்று அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுகவின் தேர்தல் லட்சினை வெளியிட்டார். மேலும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் ஜெயலலிதா பேசுவது போன்ற வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிகழ்வை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி பேசும் போது, நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் நல்ல கூட்டணி அமையும் என நம்பிக்கை தெரிவித்து, கூட்டணி தொடர்பாக சிலர் வேண்டுமென்றே வதந்திகளை பரப்பி வருகின்றனர் என்று குற்றம்சாட்டினார்.
வீட்டு மக்களுக்கு மட்டுமே.
தொடர்ந்து பேசிய அவர், திமுக கூட்டணியில் வெற்றி பெற்ற 35-க்கும் அதிகமான எம்.பிக்கள் மக்களுக்கு செய்தது என்ன? என்று வினவி, தமிழக மக்களின் பிரச்சினை குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பவில்லை என்றும் குறை கூறினார்.
வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் வென்று தமிழகத்தின் குரலை நாடாளுமன்றத்தில் ஒலிப்பர் என்று நம்பிக்கையுடன் தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, நாட்டு மக்களை விட்டுவிட்டு வீட்டு மக்களுக்கு மட்டுமே திமுக வேலை பார்ப்பதாகவும் சாடினார்.