ஆளுநரை எதிர்க்கிறோம் என அரசியல் நாடகம் நடத்தும் அரசு!! எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்

Tamil nadu Government of Tamil Nadu ADMK Edappadi K. Palaniswami
By Karthick Jul 19, 2024 12:36 PM GMT
Report

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி - உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி இருவருக்கும் மத்தியில் உரசல்கள் இருப்பது தெரிந்த விஷயமே.

எடப்பாடி கண்டனம்

இந்த நிலையில், ஆளுநரை எதிர்க்கிறோம் என பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர்களை நியமிக்கலாம் இருப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டன பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

செந்தில் பாலாஜிக்காக பழிவாங்கல் இது! எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது - எடப்பாடியார் கண்டனம்

செந்தில் பாலாஜிக்காக பழிவாங்கல் இது! எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது - எடப்பாடியார் கண்டனம்

அதில்,

தமிழ்நாட்டில் அரசு நிர்வகிக்கும் பல்கலைக்கழகங்களில் 13ல் 12 நிதிப் பற்றாக்குறையால் செயல்பட முடியாமல் திணறி வருவதாக வ ரும் செய்திகள் கவலையளிக்கின்றன.

Edapaadi palanisamya angry

திராவிட இயக்கத்தின் அடிப்படையான கல்வியின் உறைவிடங்களான பல்கலைக்கழகங்களையே நிர்வகிக்கத் திராணியற்ற திரு. @mkstalin , தனது விடியா ஆட்சியை "திராவிட மாடல்" என்று மார்தட்டிக்கொள்வது வெட்கக்கேடானது;

நாடகம்

ஆளுநரை எதிர்க்கிறோம் என்ற பெயரில் விடியா அரசு நடத்தும் விளம்பர அரசியல் நாடகத்தால் துணைவேந்தர்களை நியமிக்காமலும், நிதி நிர்வாகம் செய்யத்தவறியும் மாணவர்கள் எதிர்காலத்தோடு விளையாடுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

Edapaadi palanisamya angry

உடனடியாக அரசு நிர்வகிக்கும் பல்கலைக்கழகங்களின் நிதிநிலை குறித்து ஆராய்ந்து, உரிய நிதி ஒதுக்கி, மாணவர்களுக்கு தரமான உயர்கல்வி அளிக்கப்படுவதை உறுதிசெய்யுமாறு விடியா திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன்.