விஜய்க்கு எதிராக அதிமுக போட்டியிடாதது ஏன்? எடப்பாடி பழனிசாமி விளக்கம்

Vijay PMK Edappadi K. Palaniswami
By Karthikraja Mar 25, 2026 04:20 PM GMT
Report

 விஜய்க்கு எதிராக அதிமுக போட்டியிடாதது ஏன் என்ற கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார்.

விஜய்க்கு எதிராக அதிமுக போட்டியிடாதது ஏன்?

2026 சட்டமன்ற தேர்தலுக்கான தொகுதிப்பங்கீட்டை முடித்துள்ள அதிமுக, கூட்டணி கட்சி போட்டியிடும் தொகுதிகளையும் அறிவித்துள்ளது. கூட்டணி கட்சிகளுக்கு 65 இடங்களை ஒதுக்கியுள்ள அதிமுக, 169 இடங்களில் போட்டியிட உள்ளது. 

விஜய்க்கு எதிராக அதிமுக போட்டியிடாதது ஏன்? எடப்பாடி பழனிசாமி விளக்கம் | Eps Says Why Admk Not Contest Vs Vijay In Perambur

இதே போல் தவெக தலைவர் விஜய் போட்டியிட உள்ளதாக கருதப்படும் பெரம்பூர் தொகுதியை அதிமுக, கூட்டணி கட்சியான பாமகவிற்கு ஒதுக்கியுள்ளது. 

திமுக-வை கடுமையாக விளாசிய எடப்பாடி பழனிசாமி!

திமுக-வை கடுமையாக விளாசிய எடப்பாடி பழனிசாமி!

மார்ச் 28 ஆம் திகதி, பெரம்பூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தை தொடங்க அனுமதி கோரியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் விஜய் போட்டியிடும் தொகுதியில் அதிமுக போட்டியிடாதது ஏன் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

விஜய்க்கு எதிராக அதிமுக போட்டியிடாதது ஏன்? எடப்பாடி பழனிசாமி விளக்கம் | Eps Says Why Admk Not Contest Vs Vijay In Perambur

இதற்கு பதிலளித்த அவர், "கூட்டணி அமைந்த பிறகு இவர் பெரியவர், அவர் பெரியவர் என பார்க்க முடியாது. எல்லா கட்சிகளும் சமம். அனைத்து கட்சிகளுக்கும் பலம் உள்ளது. அனைத்து கட்சிகளும் சேர்ந்தால் தான் வெற்றி பெற முடியும். சிறுதுளி பெரு வெள்ளம்.

இந்த கட்சி சிறியது, அந்த கட்சி சிறியது என்ற பேச்சுக்கு இடமில்லை. எங்கள் கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளையும் ஒரே முகமாக பார்க்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.