திமுக-வை கடுமையாக விளாசிய எடப்பாடி பழனிசாமி!
தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு பிரசாரத்தை தொடங்கினார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
இன்று மயிலாப்பூர் தொகுதியில் பிரசாரம் மேற்கொண்ட போது, அதிமுக-வின் அடுத்தகட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகும், அதிமுக கூட்டணி கட்சி தலைவர்கள் சுதந்திரமாக இருக்கிறார்கள்.
திமுகவில் அப்படி இல்லை, திமுக தகுந்த அந்தஸ்தை கொடுப்பதில்லை, திமுக கூட்டணியில் கடந்தமுறை போட்டியிட்ட இடங்களை விட குறைந்த இடங்களையே கூட்டணி கட்சிகள் பெற்றுள்ளன.
அங்கீகரிக்கப்பட்ட கட்சியை விட அங்கீகாரம் இல்லாத கட்சிக்கு அதிக இடங்களை திமுக தந்துள்ளது, விசிக மட்டும் திருமாவளவன் 8 தொகுதிகளை பெற்றுள்ளார்.
திமுக ஒரு குடும்ப கட்சி, வாரிசு அரசியல் செய்கிறது, அதிமுக கொண்டு வந்த திட்டங்களை தான் திமுக திறந்து வைத்தது.
திமுக கொடுத்த வாக்குறுதிகளில் நான்கில் ஒரு பங்கை கூட நிறைவேற்றவில்லை, கடன் சுமையை அதிகரித்துள்ளது திமுக அரசு, கூடுதல் வருவாய் வந்தும் திமுக அரசு கடன் வாங்குவதற்கு ஊழலே காரணம் என தெரிவித்தார்.
பிரசாரத்தை தொடங்குவதற்கு முன்பாக மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது.