வக்பு வாரிய சட்ட திருத்தம் அரசியலமைப்புக்கு எதிரானது - எடப்பாடி பழனிசாமி
வக்பு வாரிய சட்ட திருத்தம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
வக்பு வாரிய சட்ட திருத்தம்
வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை இன்று மக்களவையில் மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மசோதாவை மத்திய அமைச்சர் கிரண் ரிஜுஜூ தாக்கல் செய்தார்.

இந்த சட்ட திருத்ததுக்கு எதிர்க்கட்சி எம்பிக்கள் பாராளுமன்றத்தில் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். இது தொடர்பாக தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொது செயலாளருமான எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி
இந்த அறிக்கையில், வக்பு சட்டத்தில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள திருத்தங்கள் சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தினரின் உரிமைகளை பறிக்கும் வகையில் உள்ளது. அரசியலைமைப்பு சட்டம் வழங்கியுள்ள மதச்சுதந்திரத்தை மறுக்கும் வகையில் உள்ளது.
முஸ்லிம்களின் நலனுக்காக முஸ்லிம்களால் அர்ப்பணிக்கப்பட்ட சொத்துக்களை அவர்களிடமிருந்து பறித்து அரசு நிர்வகிக்க நினைப்பது தவறானது. மட்டுமின்றி, வக்பு வாரியத்தில் முஸ்லிம் அல்லாதவர்களையும் அதனை நிர்வகிக்க ஒப்புதல் அளிக்கும் திருத்தம் ஏற்புடையதல்ல.
வக்பு சட்டத்தில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள திருத்தங்கள் சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தினரின் உரிமைகளை பறிக்கும் வகையில் உள்ளது. அரசியலைமைப்பு சட்டம் வழங்கியுள்ள மதச்சுதந்திரத்தை மறுக்கும் வகையில் உள்ளது.
— Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK (@EPSTamilNadu) August 8, 2024
முஸ்லிம்களின் நலனுக்காக முஸ்லிம்களால் அர்ப்பணிக்கப்பட்ட சொத்துக்களை…
வக்பு சொத்துகள் தொடர்பான தரவுகளை சேகரிக்கும் மாநில அரசின் பணிகளை பறித்து மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு செல்வது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது. ஆகவே, மதச்சிறுபான்மையினருக்கு அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய உரிமைகளை பறிக்கும் இந்த சட்டத்திருத்தத்தை மத்திய அரசு முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். என கூறியுள்ளார்.
கட்சியை களங்கப்படுத்தவே பொய்ப்பிரச்சாரங்கள் : செல்வம் எம்.பியின் குரல் பதிவு தொடர்பில் ரெலோ பேச்சாளர்! IBC Tamil