#நீங்கள் நலமா - உங்கள் ஆட்சியில் எப்படி நலமாக இருப்போம் ஸ்டாலின் - இபிஎஸ்..!
இன்று தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின், நீங்கள் நலமா என்ற புது செயலியை அறிமுகம் செய்துள்ளார்.
இபிஎஸ் அறிக்கை
இதற்கு பதிலடியாக தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "நீங்கள் நலமா" என்று கேட்கும் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களே- நலத் திட்டங்கள் நின்றுப்போச்சு! சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப்போச்சு!
சொத்துவரி, வீட்டுவரி, குடிநீர் வரி, மின்கட்டணம் உயர்ந்தாச்சு! விலைவாசி விண்ணைத் தொட்டாச்சு! எங்கு காணினும் போதைப்பொருள் புழக்கம் என்ற அவலநிலைக்கு தமிழ்நாடு ஆளாச்சு!
இப்படி, வாழ்வாதாரமே கேள்விக்குறியாகிவிட்ட உங்கள் விடியா ஆட்சியில் மக்கள் நலமாக இல்லை!
"நீங்கள் நலமா" என்று கேட்கும்
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) March 6, 2024
திரு. @mkstalin அவர்களே-
நலத் திட்டங்கள் நின்றுப்போச்சு!
சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப்போச்சு!
சொத்துவரி, வீட்டுவரி, குடிநீர் வரி, மின்கட்டணம் உயர்ந்தாச்சு!
விலைவாசி விண்ணைத் தொட்டாச்சு!
எங்கு காணினும் போதைப்பொருள் புழக்கம் என்ற அவலநிலைக்கு… pic.twitter.com/nTKZWGTtrz
அரசுத் திட்டங்களின் பயன்கள் உரிய மக்களை சேர்ந்துள்ளதா என்பதை அறிந்து கொள்ள இன்று இந்த செயலி அறிமுக செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.